Wednesday, September 18, 2019

Tag: Athivaradhar

ஒரு கோடி பேர் தரிசனம்! அத்திவரதர், இன்று இரவு ஜலவாசம் செல்கிறார்! தமிழகம் முழுவதும் மழை கொட்டுகிறது!!

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 47 நாள்களாக நடந்து வந்த அத்திவரதர் பெருவிழாவில் வெள்ளிக்கிழமையுடன் தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து,வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில்  பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மழை கொட்டுகிறது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி  ஆக.17 -ஆம் தேதி வரைதொடர்ந்து 48 நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஜூலை மாதம் முழுவதும் 31 நாள்களுக்கு பெருமாள் சயனக்கோலத்திலும், ஆக. 1 -ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்குஅருள்பாலித்தார். விழாவின் 47 -ஆவது நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) பெருமாள் வெந்தய நிறப் பட்டாடையும், ரோஜா நிற அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்குஅருள்பாலித்தார். பெருமாளுக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்டிருந்த பாதாம்பருப்பு, முந்திரி மாலையும், கதம்ப மாலைகளும் அணிந்திருந்தார். சகஸ்ர நாம அர்ச்சனை கோயில் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. நேற்று இரவு 9 மணி அளவில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திற்குள் காத்திருந்த பத்தர்கள் மட்டும்அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் நீண்ட நேரம் தரிசனம் நீடித்தது. அதன்பின்னர் நேற்று இரவுடன் அத்திவரதர்தரிசனம் நிறைவடைந்தது. நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்குகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்தபாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்படுகிறது. இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ளஅத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர்நிரப்பப்படும். ...

அத்திவரதர் தரிசன காலம் நீட்டிப்பு கிடையாது: இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திட்டவட்டம்!!

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அத்திவரதரை வழிபட தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருவதால் ...

அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்த தி.மு.க எம்.எல்.ஏ மஸ்தான்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 31 வரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலித்து வருகிறார்.  45-வது நாளான இன்று ...

அத்திவரதரை தரிசித்த கர்ப்பிணிக்கு கோயில் வளாகத்திலேயே சுகப்பிரசவம்! அழகான ஆண் குழந்தை பிறந்தது!!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 31 வரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலித்து வருகிறார்.  அத்திவரதர் பெருவிழாவின் 45-வது ...

அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணிகள் : ரொம்ப.. ரொம்ப சூப்பராம்!! ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டி அறிக்கை!!

அத்திவரதர் தரிசன நிகழ்வில், காவல்துறையின் பாதுகாப்புப்பணியை ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டி அறிக்கை அளித்துள்ளது. இதற்குமுன் எந்த நிகழ்விலும் இதுபோன்று அந்தச் சங்கம் பாராட்டியதில்லையாம். இதுகுறித்து ஐபிஎஸ் ...

கோவில் அருகில் வரை போவது ஈஸி! அத்தி வரதரின் தரிசனத்துக்காக புதிய வசதி – பக்தர்களின் சிரமத்தை போக்கும் நடவடிக்கை!

காஞ்சிபுரத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையங்களுக்கு வரும் பக்தர்களை கோவில் அருகில் கொண்டு விடுவதற்காக 70 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ...

வாருங்கள் தெரிந்து கொள்வோம் ! அத்திமரத்தால் செய்த தெய்வங்கள் இத்தனை உள்ளதா !

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதர் சிலை அத்தி மரத்தால் ஆனது. அது போல் பல திருத்தலங்களில் அத்தி மரத்தால் ஆன தெய்வங்கள் காட்சி அளிக்கின்றன. ...

ஆடி பெருக்கையொட்டி அத்திவரதர் தரிசனம் 6 மணி நேரம் ரத்து

08 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து ...

அத்திவரதரை காண இன்று காலை மட்டும் 1 லட்சம் பேர்!! முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு சுலப தரிசன ஏற்பாடுகள் !!

தொடர்ந்து 31 நாட்கள் சயன கோலத்தில் (படுத்த நிலையில்) இருந்த அத்திவரதர் நேற்று முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். தினந்தோறும் சுமார் 1½ லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து ...

அத்திவரதரை காண வரும் பக்தர்கள் அங்க இங்க அலைய தேவை இல்லை – ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் ஏ.டி.எம்.!

காஞ்சிபுரத்தில் நடைபெறும் ‘அத்திவரதர்’ திருவிழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களின் வசதிக்காக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நடமாடும் ஏ.டி.எம் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நடமாடும் ...

Page 1 of 3 1 2 3

Don't Miss It

Recommended