செய்திகள்
Trending

எமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்

நாடாளுமன்ற கூட்டு தொடரில் காங்கிரஸ் தலைவர், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, பா.ஜ.க,வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடினார். அவரின் பேச்சுக்களில் சில வரிகள், சபை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடப்பு லோக்சபாவில், முதல் முறையாக, பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி பேசியதாக தினமலர் செய்தி குறிப்பு கூறுகையில், “நேற்று முன்தினம் பேசிய, காங்கிரசின் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, காங்., சாதனைகளை பட்டியலிட்டார். காங்கிரசின் கொள்கைகளைத் தான், நாங்கள் துாசி தட்டி எடுத்து, வேறு பெயர் சூட்டி பயன்படுத்துவதாக கூறினார். அவர் ஒன்றை சொல்ல மறந்து விட்டார். நாட்டில் காங்கிரஸ் கொண்டு வந்த, அவசர நிலை எனப்படும், ‘எமர்ஜென்சி’யை அறிமுகப்படுத்தியதை, அவர் கூற தவறிவிட்டார்.

இன்றிலிருந்து, 44 ஆண்டுகளுக்கு முன், ஆட்சியில் தான் நீடிக்க வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும், அவசர நிலையை பிரகடனம் செய்தார் ஒருவர்.பத்திரிகைகளின் வாய் பூட்டப்பட்டது; எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்; இந்த நாட்டின் ஆன்மா நசுக்கப்பட்டது. அத்தகைய செயலை செய்தவர்களை, இந்த நாடு ஒரு போதும் மன்னிக்காது. அவர்கள் செய்த பாவத்திற்கு விமோசனமே கிடையாது.

அந்த காலத்தில், நாட்டின் ஜனநாயக குரல் வளை நசுக்கப்பட்டதை யாராலும் மறக்க முடியுமா? அந்த நிலையை எதிர்த்து, போராடிய தலைவர்களை நான் வணங்குகிறேன்; இந்த நாடே வணங்குகிறது.முந்தைய ஆண்டுகளில், உச்சாணிக் கொம்பில் காங்கிரஸ் இருந்தது என்றார், நேற்று முன்தினம் பேசியவர். அதற்காக வாழ்த்துகள். அதே நேரத்தில், நீங்கள் தரையில் நடப்பது என்ன என்பதை பார்க்கத் தவறி விட்டீர்கள்.

நாங்கள் உங்களைப் போல உச்சியை அடைய விரும்பவில்லை. தரையில், மக்களுடன் மக்களாக இருக்க விரும்பினோம். அது, இந்த தேர்தலில் நடந்தது; எங்களுக்கு அமோக வெற்றி கிடைத்தது”, என்றார்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close