இந்தியாசெய்திகள்
Trending

தாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை

திருப்பூரை அடுத்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர், மாரியம்மாள், பனியன் கம்பெனியில், டெய்லராக பணிபுரிந்து வரும் இவர், திருப்பூர் கலெக்டர் பழனிசாமியிடம் அளித்த மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “என் மகன்களான மணித்துரை, 23, மணிகண்டன், 21, ஆகியோரை, குடும்ப வறுமையால், வேலைக்காக வெளிநாடு அனுப்ப முயன்றேன். அவிநாசியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், 2.70 லட்சம் ரூபாய் பெற்று, இருவரையும், தாய்லாந்து நாட்டிலுள்ள பனியன் கம்பெனிக்கு, ஜனவரி மாதம் அனுப்பி வைத்தார். ஆனால், அங்கு ஓட்டலில், வேலைக்கு சேர்த்துள்ளனர். சம்பளமும் வழங்கவில்லை. கொத்தடிமையாக பணிபுரிந்துள்ளனர். நான், ஓட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டு, ₹88,000 கொடுத்து, மணிகண்டனை திருப்பூருக்கு வரவழைத்தேன். மூத்த மகன் மணித்துரையை மீட்க முடியவில்லை. திருப்பூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, மகனை மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்”, என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அரசின் பரிந்துரைப்படி, மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்படும் என்று கலெக்டர் பழனிசாமி கூறினார்.

பிறகு, திரு மணிதுரை அவர்கள் தாய்லாந்திலிருந்து வெளியேற அனைத்து உதவிகளையும் மத்திய வெளியுறவுத்துறை செய்யும் என்று வெளியுறவுத்துறை அமைச்சரும், தமிழருமான திரு ஜெய்ஷங்கர் பதிவிட்டுள்ளார். இதனை தமிழிலும் ட்வீட் செய்து அசத்தியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசு செய்த நல்ல விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தாத தமிழகத்தின் பிரதான ஊடகங்கள், இந்த சம்பவம் குறித்தும் அதே போல் அமைதி காத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close