செய்திகள்

மோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் !!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது மோடிகள் எல்லாம் திருடர்கள் என்று அவதூறாக பேசிய ராகுல் காந்திக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடிகள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று விமர்சித்தார். மோடி சமுதாயத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பதிலளிக்க ராகுலுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியது. ஆனால் ராகுல் நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலம் பதிலளித்தார். அதை ஏற்காத நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஜூலை 3 ஆம் தேதி நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ராகுல் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close