தமிழ் நாடு

அமெரிக்க ஐ.டி நிறுவன ஊழியர், இன்று தமிழக பனை ஆர்வலர்- பிரம்மிக்க வைக்கும் சதீஸ்..!

வட அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பன்னாட்டு மாத இதழான வலைத்தமிழ் தமிழகத்தை சேர்ந்த பனை மர ஆர்வலர் பனை சதீஸ் குறித்தும் அவரின் பனை செயல்பாடுகளை தொடராக செய்துள்ளனர்.

மாநிலத்தின் மரமாகத் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது பனை மரம். அத்தகைய பனை மரத்தை எதிர்கால சந்ததியினர் படங்களாக மட்டுமே பார்க்கும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பல்வேறு காரணங்களால் அழிவுக்குள்ளாகப்பட்டு வரும் பனைமரங்களின் இன்றைய பரிதாப நிலைதான் அதற்குக் காரணம்.

ஒரு மரத்தின் இலை, காய், கிளை, வேர், கிழங்கு என எல்லா வகையிலும் பயன்படும் தன்மை கொண்டிருப்பது பனை மரங்களில் மட்டுமே சாத்தியம். அரசால் மாநில மரமாக அங்கீகரிக்கப்பட்ட பனை மரங்கள் தினம் தினம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள 3 கோடி பனை மரங்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2 கோடி பனை மரங்கள் உள்ளன. இதில் 72% மரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தன. தெற்கே ராமேஸ்வரம் தொடங்கி கேரளாவின் திருவனந்தபுரம் வரையிலும், வடக்கிலே தஞ்சாவூர் வரையிலும் பனை மரங்கள் மிகுந்து காணப்பட்டன. 100 முதல் 110 அடி உயரம் வரை வளரும் பனை மரத்தை தண்ணீர்விட்டு வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னுள் உள்ள வேரின் மூலம் தண்ணீரைத் தேக்கி வைத்து வளரும் தன்மை கொண்ட அவை, அருகில் வளரும் செடி கொடி, மரங்களுக்கும் நீரைக் கொடுக்கும் தன்மை உடையது. எத்தகைய சூறாவளிக் காற்றையும் சமாளித்து நிற்கக்கூடிய வலிமை கொண்டது. ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரங்கள் மேகங்களைக் குளிர்வித்து மழைப் பொழிவுக்கு உதவியும், கடலோர பகுதிகளில் ஏற்படும் மணல் அரிப்பைத் தடுத்தும் வருகின்றன.

பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதனீர், அதைக் கொண்டு காய்ச்சப்படும் கருப்பட்டி, கற்கண்டு, பனம் பழம், பனங்கிழங்கு என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. முன்பெல்லாம் பஞ்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் சுவாச உறுப்புகளைப் பாதுகாக்க வாழைப்பழமும் பனங்கற்கண்டும் வழங்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியை அளிப்பது பதனீர் ஆகும். இவை தவிர பனை ஓலை, அதன் மட்டை, வேர் எனப் பனை மரத்தின் அனைத்துப் பகுதிகளும் பயன்பாட்டுக்கு உரியனவாக இருப்பது இதன் சிறப்பாகும்.

அமெரிக்க வலைத்தமிழில் பனை சதீஸ் உரையாடல் :

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இவர் பனை மரத்தின் மீதுள்ள தீவிரப் பற்றால் தன்னைப் பனை சதீஷ் என்றே அழைத்துக் கொள்கிறார். பனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மிக நீண்ட மிதிவண்டிப் பயணம் முடித்து வந்திருக்கிறார். இவருடைய நண்பர்கள், நட்புக் குழுக்கள் மூலம் எண்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்திருக்கிறார்.

இரமா (கட்டுரையாளர்): வணக்கம் சதீஷ் உங்களைப் பற்றியும், பனை மரத்தின் மீது எப்படி உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது என்பது குறித்தும் கூற முடியுமா?

சதீஷ் : வணக்கம் இரமா. நான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன். பட்டு நெசவுத் தொழில் புரியும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து படித்து வளர்ந்து சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் சமூகப் பணி 2017-ல் நடந்த சல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு தான் தொடங்கியது. அதுவரை மற்ற தமிழக இளைஞர்களைப் போன்று தான் வாழ்ந்து வந்தேன், சல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு நம் சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நம் சமூகத்தில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் ஒற்றை இலக்கை நோக்கிப் பயணப்பட்டால் தான் வெற்றி பெற முடியும் எனக் கருதி நம் மொழியோடு மிகவும் தொடர்புடைய பனை மரத்தைத் தேர்ந்தெடுத்தேன். தமிழர்களின் அடையாளமாக இருந்து தற்போது புறக்கணிக்கப்படும் பனையை எப்படி. இன்றைய தலைமுறையினருக்கும், நம் அடுத்த தலைமுறையினருக்கும்
கையளிக்கப் போகிறோம் என்ற தேடல் ஏற்பட்டது. அதனால் பனை விதை நடவிலிருந்து ஆரம்பித்தேன். பனையின் வரலாறு மற்றும் பனை பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளத் தொடங்கினேன்.

இரமா: நன்றி சதீஷ், சமூக அக்கறையுடன் உங்களைப் போன்ற இளைஞர்கள் பணி மிகவும் மகத்தானது. குறிப்பாகப் பனை மரம் என்ற ஒற்றை இலக்குடன் செயல் படுவது சிறப்புக்குரியது. பனை மரத்தின் வரலாறு பற்றிக் கொஞ்சம் கூறுங்கள் சதீஷ், சதீஷ்:பனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் சமூகப் பண்பாட்டு வாழ்வியலிலும், வரலாற்றிலும், பொருளியலிலும் தொடர்ச்சியாகத் தாக்கத்தை உயரத்தைப் போன்றே நெடிய வரலாறு கொண்டது. தமிழ்ச் சமூகத்தின் நீண்ட தொடர்ச்சியான வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எழுத்து மரபு கொண்ட நம் தமிழர் சமூகத்தில், பனையோலைச் சுவடிகள் மூலம் தான் நம் வரலாறு, இலக்கியம் ஆகியவை நமக்குக் கிடைத்துள்ளன. இன்றைக்கு நம் தமிழ் போகிறோம் என்ற தேடல் ஏற்பட்டது. அதனால் பனை விதை நடவிலிருந்து ஆரம்பித்தேன். பனையின் வரலாறு மற்றும் பனை பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளத் தொடங்கினேன்.

இரமா: நன்றி சதீஷ், சமூக அக்கறையுடன் உங்களைப் போன்ற இளைஞர்கள் பணி மிகவும் மகத்தானது. குறிப்பாகப் பனை மரம் என்ற ஒற்றை இலக்குடன் செயல் படுவது சிறப்புக்குரியது. பனை மரத்தின் வரலாறு பற்றிக் கொஞ்சம் கூறுங்கள் சதீஷ்.

சதீஷ்:பனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் சமூகப் பண்பாட்டு வாழ்வியலிலும், வரலாற்றிலும், பொருளியலிலும் தொடர்ச்சியாகத் தாக்கத்தை உயரத்தைப் போன்றே நெடிய வரலாறு கொண்டது. தமிழ்ச் சமூகத்தின் நீண்ட தொடர்ச்சியான வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எழுத்து மரபு கொண்ட நம் தமிழர் சமூகத்தில், பனையோலைச் சுவடிகள் மூலம் தான் நம் வரலாறு, இலக்கியம் ஆகியவை நமக்குக் கிடைத்துள்ளன. இன்றைக்கு நம் தமிழ் மொழியைச் செம்மொழி என்று கூறுவதற்குரிய காரணங்களில் ஒன்று நமக்குப் பனை ஓலைச்சுவடிகள் மூலம் வழி வழியாக வந்த இலக்கிய இலக்கணங்கள் தான். இப்படி நமக்கு எழுத்தையும் கொடுத்து மொழியையும் கொடுத்த சிறப்புக்குரிய மரம் தான் பனை மரம். பனை பற்றி நாம் மட்டும் தான் புரிந்து வைத்திருக்கிறோமா என்றால் கிடையாது. உலகில் பல நாடுகளில் வாழும் பல அறிஞர்களும் பனை குறித்து ஆய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளனர். ஆங்கிலேய அறிஞர் Palmyra Palm என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கது. அகிலத்திரட்டு, பனை 70 போன்ற செய்யுள் வடிவ நூல்கள் உள்ளன, பனைப் பயன்பாட்டை மையப் படுத்தி இனிக்கும் பதனீர், பனைத்தொழில் எனப் பல நூல்கள் உள்ளன. பனை பற்றிய நூல்களைப் படித்துச் செய்திகளை உள் வாங்கிக் கொண்டால் தான் பனையை இலை, பழம் மற்றும் நுங்கு தருகிற தரும் ஒரு மரமாகப் பார்க்காமல் ஒரு சகோதரனாகப் பாவிக்கின்ற மனநிலை வரும்.

இரமா: அருமை சதீஷ். தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய பனை மரத்தைப் பற்றி தமிழ் இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள் பற்றிச் சொல்லுங்கள் சதீஷ்.

சதீஷ்: தொல் தமிழ்க் கல்வெட்டுகள் என்றழைக்கப்படும் கிமுவைச் சேர்ந்த தமிழ்பிராமி கல்வெட்டுகளிலும், சங்க இலக்கிய நூல்களான தொல்காப்பியத்திலும், எட்டுத் தொகை மற்றும் பத்துப் பாட்டிலும், பனை மரத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மதுரை அழகர் மலையில் கிடைத்த கிமு ஒன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் பானிக வணிகன் நெடுமலன் என்று ஒரு வணிகரைப் பற்றிக் குறிப்பு இருக்கிறது. கல்வெட்டுகளில் பனைப் பாலைப் பதனீராகக் காய்ச்சி விற்பவரைத் தான் பானிக வணிகன் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த வணிகர் சமண முனிவர்களுக்குக் கல் படுகைகள் அமைத்துக் கொடுத்ததாகக் கல் வெட்டு குறிப்பிடுகிறது. அதே போல் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் இரத்தினகிரி மலையில் உள்ள கிமு ஒன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் சமண முனிவர்களுக்குக் கல் படுகை அமைத்துக் கொடுத்த மன்னரின் ஊர் பனைத்துறை என்ற குறிப்பு உள்ளது.

இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பே பனைப் பெயரை அடிப்படையாக வைத்து ஊர் பெயரைக் குறிப்பிடும் மரபு இருந்திருக்கிறதென்றால் பனைத் தொழில் எவ்வளவு செழித்திருந்து என்பதை உணர முடியும். இதே போல் பனைக்குளம், பனையூர், பனங்காடி என்று பனைப் பெயரை அடிப்படையாக வைத்து கர்ப் பெயர்கள் நிறைய இருக்கின்றன. தொல்காப்பியர் பெரிய, மிகச்சிறந்த தன்மையைக் குறிப்பிடுவதற்கான அளவு கோலாகப் பனையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

திருவள்ளுவர்,
தினைத்துணை நன்றி செயினும் பனைத்
துணையாக் கொள்வர் பயன்தெரிவார்.

என்ற திருக்குறளில் ஒருவர் தினையளவு உதவி செய்தாலும் அதன் பயனை ஆராய்கின்றவர் பனையளவாகக் கொண்டு போற்றுவர் என்று குறிப்பிடுகிறார்.

இவ்வாறு பனை சதீஸ் அளித்த பேட்டி அமெரிக்க வலைத்தமிழில் வெளிவந்துள்ளது.

இனி நாம் செய்ய வேண்டியது என்ன..?

இத்தகைய சிறப்பு வாய்ந்த பனை மரங்களை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் வாழ்வு இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. அழிந்து வரும் பனை மரங்களைப் பாதுகாக்கவும், அவற்றை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் பனை மரம் வளர்த்தலை அரசு முன்னெடுக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கப்படுவதுபோல் தினமும் பதனீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பு இருந்ததுபோல பனையிலிருந்து தயாரிக்கப்படும் பனைப் பொருள்களைப் பிரபலம் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மாநில மரமாக விளங்கும் பனை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதுடன், பனைத் தொழில்களை மீட்டெடுக்கவும் அரசு முன்வர வேண்டும். கடும் வறட்சியால் ஒரு புறம் காய்ந்து வரும் பனை மரங்கள் மறுபுறம் மனிதர்களால் அழிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலை நீடித்தால் பனை மரங்களை எதிர்கால சந்ததியினர் படங்கள் மூலமே காணும் நிலை உருவாகும். அதைத் தடுக்கும் முயற்சிகளை அரசு இப்போதே தொடங்க வேண்டும்.


பனை விதைகளை விதைப்பது எப்படி? இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம் பனை

உலகிலேயே மிகவும் பெரிய பனைமர வகை | இன்று தங்கத்தில் தாலி செய்கிறார்கள் ஆனால் அன்று தாலி தந்த மரம் இதுதான் .வாழ் நாளில் ஒரு முறை மட்டுமே பூத்து குலுங்கும்; அதன் பின் மரம் பட்டு போகும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close