செய்திகள்

காஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்! இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி! – மோடி அரசு தகவல்!!

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது: –

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 700 – க்கும் மேற்பட்ட பங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 113 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 257 பேரும், 2017 – ஆம் ஆண்டில் 213 பேரும், 2016 – இல் 150 பேரும் கொல்லப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். 

பயங்கரவாத விஷயத்தில் சிறு தவறையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். 

இதன் காரணமாக, பயங்கரவாதிகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்க முயற்சிக்கும் நபர்களை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் மீதான நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close