பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது. இதற்கான முயற்சிகளை 2017-ம் ஆண்டிலிருந்து அரசு எடுத்து வருகிறது. நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்துடன் நேஷனல் இன்சூரன்ஸ் ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைட்டெட் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களை இணைப்பதற்கான வழிகளை அரசு யோசித்து வருகிறது.
மேலும் நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கான வழிகளையும் பரிசீலித்து வருகிறது. கடந்த நிதியாண்டின் பட்ஜெட் தொடரில் இம்மூன்று காப்பீட்டு நிறுவனங்களையும் ஒரு சேர இணைப்பதற்கான திட்டத்தை அரசு முன்மொழிந்திருந்தது.
பல்வேறு காரணங்களால் அந்த திட்டத்தை சாத்தியப்படுத்த முடியாமல் போனது. தற்போது இம்மூன்று நிறுவனங்களையும் நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எல்.ஐ.சி நிறுவனம் போல் பெரிய அளவிலான ஒற்றை காப்பீட்டு நிறுவனமாக மாற்றுவதற்கு அரசு முயற்சித்து வருகிறது.