வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமைத் தாங்கி உரையாற்றினார். பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இணைச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பேரவையின் தலைவர் வழக்கறிஞர் க.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு கூட்டத்தில், ராமதாஸ் பேசுகையில் “பா.ஜ.க-வுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பக்க பலமாக இருப்பதைப் போன்று, பா.ம.க-வுக்கு வழக்கறிஞர்கள் சமூக நீதி பாதுகாப்பு பேரவை உறுதுணையாக இருக்கவேண்டும். வெறுப்பு அரசியலுக்கு வழக்கறிஞர்கள் பதிலடி கொடுக்கவேண்டும்‘ என பேசினார்.
இந்த கூட்டத்தில்12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த நீதிபதி களின் எண்ணிக்கையை அதிகரிக் கக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
அன்புமணி ராமதாஸ் பேசியபோது : வாக்குக்காக நாங்கள் ஒரு போதும் போராட்டம் நடத்தியது இல்லை. தமிழக மக்களின்நலனுக்காகவும், முன்னேற்றத் துக்காகவும் பாமக போராடி வருகிறது. எல்லா சமுதாயமும் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். திருமாவளவனுக்கு எங்களை எதிர்ப்பதுதான் அரசியல். தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டால்தான் திமுகவுக்கு அரசியல் ஆதாயம்’’ என பேசினார்.