காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மானாமதுரையில் வாக்கு சேகரிக்க சென்ற போது அவருக்கு ஆரத்தி எடுக்க 25 பெண்களை ஏற்பாடு செய்த காங்கிரசார் பேசியபடி தட்டுக்கு 500 வீதம் கொடுக்காமல் மொத்தமாக 800 ரூபாய் மட்டும் கொடுத்து ஏமாற்றியதாக பாலிமர் செய்தி குறிப்பு கூறுகிறது.
800 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படி தங்களுக்குள் பிரித்துக் கொள்வது என்று ஆதங்கப்பட்ட பெண்கள் , எந்த வித தயக்கமும் இன்றி, ஆரத்தி தட்டு பஞ்சாயத்தை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடமே கொண்டு சென்றனர்.
அவரோ, அங்கிருந்த பெண்களிடம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீடுதேடி வரும் என்று தனது ரூட்டை மாற்றினார்.
அவர் அங்கிருந்து கிளம்ப, ஆரத்தி தட்டுகே பணம் முழுசா வரல, அக்கவுண்டுல எப்படி 6 ஆயிரம் ரூபாய் வரும்? என்று ஆதங்கப்பட்டவாறே பெண்கள் கலைந்து சென்றனர் என்று அந்த செய்தி குறிப்பு மேலும் கூறுகிறது.
இதற்கிடையே ஆரத்தி தட்டுக்கு பகிரங்கமாக பணம் கொடுத்த கட்சிகள் வெளியாகி உள்ளதால் சம்பந்தபட்ட காங்கிரஸ் பிரமுகர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது