கரூரில் தி.மு.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள், “நாடும் நமதே, நாற்பதும் நமதே” என்று பேசியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு நம் மக்கள் மீது உள்ள அலட்சியத்திற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், 'கஜா புயல் பாதிப்பில் நடைபெறும் நிவாரணப் பணிகள்!'
தமிழகத்தை காப்பாற்ற இவர்களை விரட்டும் ஜனநாயக
போரில் இனி நமது முழக்கம்,‘’நாடும் நமதே!… நாற்பதும் நமதே!’’ pic.twitter.com/oLE4ILZJWU
— M.K.Stalin (@mkstalin) December 27, 2018
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் திருமதி தமிழிசை அவர்கள், “நாடும் நமதே நாற்பதும் நமதே என்று கனவுகாணும் ஸ்டாலின்அவர்களே, ஊழல் சர்க்கார் நமதே! ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த தி.மு.க ஊழல் ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! தி.மு.க-வும் நமதே! திகாரும் நமதே ! என்று கடந்த காங்கிரஸ் கூட்டணியில் உங்கள் சாதனையையும் மக்கள் மறக்கவில்லை”, என்று பதிவிட்டுள்ளார்.
நாடும் நமதே நாற்பதும் நமதே. என்று கனவுகாணும் ஸ்டாலின்அவர்களே,!ஊழல் சர்க்கார் நமதே!ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த தி மு க ஊழல்ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! தி மு க வும்…நமதே!திகாரும்…நமதே ! என்று கடந்த காங்கிரஸ் கூட்டணியில் உங்கள்சாதனையையும் மக்கள்மறக்கவில்லை
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) December 27, 2018