பெருமைமிகு ஸ்ரீரங்கம்:
சைவமும் வைணவமும் தழைத்தோங்கும் பெருமைமிகு மலைக்கோட்டை மாநகரத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பது ஸ்ரீ ரங்கம். பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீ ரங்கம் சுக்ர தோஷங்களை நிவர்த்தி செய்யும் முக்கிய புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.
நாத்திக கொள்கை கொண்ட கட்சி தலைமையின் கோவில் பயணம்:
திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவரும், தமிழ் நாடு சட்டமன்ற பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய சுக்கிர தோஷ நிவர்த்திக்காக ஸ்ரீ ரங்கம் ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்வதற்காக 22 ஜுன் 2018 அன்று ஸ்ரீ ரங்கம் வந்தடைந்தார். ஸ்டாலினை கோவில் நிர்வாகத்தினர் சால்வை அணிவித்து அனைத்து மரியதைகளுடன் வரவேற்றனர்.
நாத்திகர்கள் அதிர்ச்சி:
நாத்திகம் பேசும் திமுகவின் செயல் தலைவரான ஸ்டாலினின் திடீர் ஸ்ரீ ரங்கம் வருகை தி.மு.க-வினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஊருக்கு நாத்திக உபதேசம், தன் சொந்த வாழ்வில் அனைத்தும் தெய்வ ஸங்கல்பம் என்று ஸ்டாலின் அவர்களின் ஸ்ரீ ரங்கம் வருகை பரவலாக பார்க்கப்படுகிறது. திரு ஸ்டாலினின் திடீர் பரிகார யாத்திரை தமிழ்நாட்டு மக்களிடயே பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. “தில்லை நடராஜனையும் ஸ்ரீ ரங்கநாதனையும் பீரங்கி வைத்து தகர்கும் நாள் என்னாளோ, அந்நாளே பொன்நாள்”, என்ற கோஷம் போட்ட தி.மு.க, இன்றைக்கு தன்னுடைய கடவுள் மறுப்பு கொள்கையிலிருந்து பின்வாங்கி இருக்கிறது என்று அரசியல் நோக்கர்களிடையே கருதப்படுகிறது.
கடவுள் மறுப்பு கோஷம் அன்று, கடவுள் இருப்பின் உணர்வு இன்று:
“கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை. கடவுளை கற்ப்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்புபவன் காட்டுமிராண்டி” என்று ஆன்மீகவாதிகளை தொன்றுதொட்டு வசைப்பாடிய ஈ.வெ.ரா.வின் வழிவந்த தி.மு.க-வின் செயல் தலைவரின் கோவில் யாத்திரை ஆன்மீக அன்பர்களிடேயே நகைப்புக்குறியதாக பார்க்கப்படுகிறது.
தி.மு.க.-விற்கு தர்மசங்கடம்:
ஏற்கனவே தி.மு.க-வின் தலைவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மனைவி ராஜாத்தி அம்மாள், திமுக செயல் தலைவரின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவில்கள் சென்று வழிபாடுகள் செய்து வந்த நிலையில் ஸ்டாலினின் ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோவில் பரிகார யாத்திரை தி.மு.க.விற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.