செய்திகள்

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் திருக்குளத்தில் இறங்கி அஹோபில மடத்தினர் பிரார்த்தனை !! மழை பொழிய வேண்டி சங்கல்பம்!!

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் மழை வேண்டி ஜீயர் ஸ்ரீமதி அழகிய சங்கர் தலைமையில், அவரது சீடர்கள் மார்பளவு தண்ணீரில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதற்காக ஏரிகளை தூர்வாருதல், குடிமராமத்துப் பணிகள் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

இதனிடையே வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வருண பூஜை நடைபெற்றது. ஹிருதபா தாசினி குளத்தில் அஹோபில மடத்தின் 46 -வது ஜீயர் ஸ்ரீமதி அழகிய சங்கர் தலைமையில், அவரது சீடர்கள் 10 பேர் மார்பளவு நீரில் மூழ்கி மழை வேண்டி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக வருண பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close