இந்தியா

இது வீழ்ச்சியல்ல.. எழுச்சியே.! சமூக விரோதிகளால் இடிக்கப்பட்ட நவபிருந்தாவனத்தின் ஒரு பகுதியை 36 மணி நேரத்தில் கட்டி முடித்த சாதனை.!

கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம் ஆனேகுந்தியில் ஸ்ரீ வியாசராஜரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. மாத்வ குரு பரம்பரையில் அவதரித்த ஒன்பது மாத்வ ஆசார்யர்களின் பிருந்தாவனங்களே, நவ பிருந்தாவனங்கள் என்று அழைக்கப்பட்டு பக்தர்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ ஜய தீர்த்தர், ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர், ஸ்ரீ வாகீச தீர்த்தர், ஸ்ரீ வியாசராஜர், ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர், ஸ்ரீ ராமதீர்த்தர், ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர், கோவிந்த தீர்த்தர் ஆகிய ஒன்பது மடாதிபதிகளின் பிருந்தாவனங்களுள், கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம், ஆனேகுந்தியில் இருந்த வியாசராஜரின் பிருந்தாவனம் 17-7-2019 இரவு சிலரால் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ வியாசராஜர் 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தர்மநெறிகளைக் காத்தருளிய மஹான். ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் முற்பிறவி அவதாரமாகப் போற்றப்படும் வியாசராஜரின் மூல பிருந்தாவனம் மிகவும் பக்தியுடன் வழிபடப்பட்டு வருகிறது.

கடந்த வியாழன் அன்று காலை வழக்கம்போல் பூஜை செய்யப் படகில் வந்த பூஜை செய்பவர்கள், வியாசராஜரின் பிருந்தாவனம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் கங்காவதி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை ஆய்வு செய்தனர். தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்த உத்தராதி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீபாத சுவாமிகள், தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் மாநில அரசுக்கு விடுத்த கோரிக்கையில் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். செய்தி கேள்விப்பட்டவுடன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து பக்தர்கள் அங்கு திரண்டனர். சூட்சும சரீரமாக இருந்து தர்மத்தைக் காத்துநின்ற இந்த மஹானின் சந்நிதி அடியோடு தகர்க்கப்பட்டது குறித்த தங்களின் வருத்தத்தைச் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துவருகிறார்கள். இந்த நிலையில், சமூக விரோதிகளால் இடிக்கப்பட்ட நவபிருந்தாவனத்தின் ஒரு பகுதியை 36 மணி நேரத்தில் கட்டி முடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. கோவில் இடிந்த வேதனையில் இருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வரும் சீரமைப்பு முயற்சி சற்று ஆறுதலைக்கொடுத்துள்ளது.

இதையும் படியுங்க: சக்தி வாய்ந்த ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரின் மூல பிருந்தாவனத்தை நள்ளிரவில் இடித்த மர்ம நபர்கள் – லட்சக்கணக்கான பக்தர்களை சோகத்தில் ஆழ்த்திய அதிர்ச்சி சம்பவம்.!

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close