செய்திகள்
Trending

பிரபல ரவுடிக்கு வி.வி.ஐ.பி பாஸ். ஆனால் சாமானிய ஹிந்துக்கள் 10 கி.மீ வரிசையில் வெயிலில் காற்று, குடிநீர் இல்லாமல் வேதனை – #AthiVaradhar

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் அத்தி வரதர் வைபவத்தில் பங்குபெற்று அத்தி வரதரை தரிசனம் செய்ய கடலென பக்தர்கள் காஞ்சியில் தினமும் குவிந்து வருகின்றனர்.

அத்திவரதர் உற்சவத்தின் 13ஆம் நாளான கடந்த சனிக்கிழமை பச்சை பட்டு உடுத்தி மலர் மாலை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சனிக்கிழமை ஏகாதசி பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதாக செய்திகள்வெளியாகியுள்ளன.

கிட்டத்திட்ட இரண்டு லட்சம் பக்தர்கள், காஞ்சிபுரத்தில் அன்று குவிந்தனர் என்றும் கோவிலில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்த பின்னரே சாமியை தரிசிக்க முடிந்தது. வரிசையில் காத்திருக்கும் போது, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் வெயிலில் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்ற புகார்கள் எழுந்துள்ளன.

வைபவத்தின் முதல் நாள் துவங்கி தமிழக அரசு செய்து வரும் ஏற்பாடுகளை பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். காற்று, குடிநீர் இல்லை. கழிப்பிடம் இல்லை. மின்விசிறி இல்லை, வெயிலை மறைக்க தார்பாலின் இல்லை. வரிசையில் உள்ள பெரியவர்களும் குழந்தைகளும் அடிக்கடி மயக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது வேதனைக்குரியது.

ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரள்வதால் அத்திவரதரை தரிசிக்க முடியாமல் சாமான்ய மக்களில் சிலர் பாதியிலேயே திரும்பும் நிலையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் வி.வி.ஐ.பி.க்கள் தரிசனம் செய்யும் இடத்தில் அனுமதிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சூர் செல்வம் மீது மதுரை, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள காவல் நிலையங்களில் கொலை முயற்சி, ஆட்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்றும் வரிச்சூர் செல்வத்தை போலீசார் சரித்திர பதிவேட்டுக் குற்றவாளியாக பதிவு செய்துள்ளனர் என்றும் பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் அத்திவரதரதரை வெகு முக்கிய பிரமுகர்களுக்கான வி.வி.ஐ.பி. தரிசனம் செய்யும் இடத்தில் அதாவது அத்திவரதர் சன்னதியில் வெகு அருகில் அமர்ந்து தரிசனம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவி ஹிந்துக்கள் வரிசையில் நின்று, காற்று, குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்பட்டு, அத்தி வரதரை தரிசித்து அருள் பெரும் நிலையில், ரவுடிக்கெல்லாம் வி.வி.ஐ.பி பாஸ் அளிப்பது, ஹிந்துக்களுக்கு அளிக்கப்படும் அநீதியாக ஹிந்துக்கள் கருதுகின்றனர். தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் திராவிட கட்சிகளின் ஆட்சியில், இன்னும் வேறு என்னவெல்லாம் பார்க்க கூடுமோ என்று வேதனை படுகின்றனர் தமிழ் ஹிந்துக்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close