சமூக ஊடகம்செய்திகள்

“பியூஷ் மனுஷ் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உண்மை தான்” : மீண்டும் உரக்க சொல்லும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் கொண்டு வரும் நலத்திட்ட பணிகளை தடுத்து நிறுத்த பொது மக்களை மூளை சலவை செய்து போராட்டத்திற்கு தூண்டி வருபவர் தான் பியூஷ் மனுஷ். இவருடன் பணி புரிந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கிருபா முனுசாமி, இவர் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு பாலியல் புகார்களை முன் வைத்தார். தன்னை மட்டும் அல்லாது அவருடன் பணிபுரியும் பிற பெண்களையும் அவரின் பாலியல் இச்சைக்கு ஆளாக்குவார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பிறகு, பியூஷ் மனுஷின் ஆதரவாளர்கள், புகார் கூறிய பெண்மணியை மிகவும் கேவலமாக சமூக வலைத்தளங்களில் வசை பாடினார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமி, பெரியாரிய சிந்தனை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பியூஷ் மனுஷை போன்ற போலி போராளியான முகிலன் தற்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கிருபா முனுசாமி தன் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஜோடிக்கப்பட்டது என்று தற்போது கூறியுள்ளார் பியூஷ் மனுஷ். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமி, காணொளி ஒன்றை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், பியூஷ் மனுஷ் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது உண்மை தான் என்று மீண்டும் உரக்க கூறியுள்ளார். தான் முகிலனை ஆதரிப்பதாகவும் கூறியுள்ள கிருபா முனுசாமி, ஜகத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் பியூஷுடன் இருந்த இருவருக்கு நிலம் அளித்ததையும் தன்னையும் தொடர்பு படுத்தி பேசும் பியூஷிற்கு வெட்கம், மானம் இருந்தால் அவர் அதை நிரூபிக்க வேண்டும் இல்லையென்றால் தன்னிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கிழித்து தொங்கவிட்டுள்ளார் வழக்கறிஞர் கிருபா முனுசாமி. இவரின் ட்விட்டர் பதிவுகள் மற்றும் முகநூல் காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும், சேலம் பி2 காவல் நிலையத்தில் பியூஷ் மனுஷ் மீது பாலியல் புகார் உள்ளதாகவும், மனைவியின் தங்கையிடம் தவறாக நடந்து கொண்டதால் அவரது மனைவி, விவாகரத்து கேட்டதாகவும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close