செய்திகள்

இந்திய ரூபாய் துபாயிலும் செல்லும் – சர்வதேச அரங்கில் உயரும் தேசத்தின் மதிப்பு.!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மூன்று முனையங்கள் உள்ளன. இவற்றில் உள்ள வரி விலக்கு பெற்ற கடைகளில் பொருட்கள் வாங்கும்போது திர்ஹாம் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிற 15 கரன்சிகளை கொடுத்து வாங்கலாம்.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் மேற்கண்ட கடைகளில் இந்திய ரூபாயும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து துபாயில் உள்ள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கண்ட 3 முனையங்கள் தவிர, அல் மக்தும் விமான நிலையத்தில் உள்ள வரி விலக்கு பெற்ற கடைகளிலும் இந்திய ரூபாய் நோட்டு செல்லும். துபாய் நாட்டு கரன்சி அல்லாத 16வது கரன்சியாக ரூபாய் ஏற்கப்பட்டுள்ளது. துபாய் டூட்டி ப்ரீ அதிகாரிகள் டிவிட்டரில் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டில் துபாயில் உள்ள வரி விலக்கு பெற்ற கடைகளில் 201.5 கோடி டாலருக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இதில் இந்தியர்களின் பங்களிப்பு 18 சதவீதம். அதோடு, இந்தியாவில் இருந்து துபாய்க்கு பயணம் செய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close