செய்திகள்

வைகோவின் எம்.பி கனவு தகர்கிறது! தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை! – சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு !!

நாடாளுமன்ற தேர்தலில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் ம.தி.மு.க.வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தொடர்ந்து ம.தி.மு.கவின். மாவட்ட செயலர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராஜ்யசபா வேட்பாளராக வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே வைகோ மீதுள்ள தேசத் துரோக வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது. 

ராஜ்யசபா எம்.பி. பதவி கனவில் இருந்த வைகோவிற்கு இந்த தீர்ப்பு பேரிடியாக உள்ளது. குற்றவாளியான அவருக்கு எம்பியாக பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2009 – இல் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நுால் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் வைகோவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்ததாகவும் சென்னை ஆயிரம் விளக்கு போலீசாரால் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையானது சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close