சமூக ஊடகம்
Trending

நேற்று திடீரென முடங்கிய முகநூல் மற்றும் வாட்சப் தகவல் பரிமாற்றம்

வாட்சப் மற்றும் முகநூல் ஆகிய இரு செயலிகளும் தகவல் பரிமாற்றங்களுக்கு பெரிதும் உதவி வருகின்றன. உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றங்களுக்கு உதவி புரியும் இந்த இரு செயலிகளிலும் நேற்று திடீரென தகவல் பரிமாற்றம் செய்வதில் தடங்கல் ஏற்ப்பட்டது.

நேற்று மாலை பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கி விட்டன. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்தது.


இந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த தகவலை பேஸ்புக் நிறுவனம் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பேஸ்புக் மற்றும் வாட்சப் ஆகிய செயலிகளை கிண்டலடித்து ட்விட்டர் நிறுவனம் பதிவிட்டது. அத்துடன் மக்களின் கருத்துகளையும் கேட்டது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close