செய்திகள்

ஈராக்கில் 4,000 ஆண்டு பழைமை வாய்ந்த பகவான் ஸ்ரீ ராமர் மற்றும் ஹனுமர் சித்திரங்கள் : பிரமிக்க வைக்கும் சரித்திரம்

இஸ்லாமிய நாடக விளங்கும் ஈராக்கில் பகவான் ஸ்ரீராமரின் உருவச்சித்திரம் பதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிந்து சமவெளி நாகரீகம்-மெசபடோமிய நாகரீகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் இந்தியக் குழு ஈராக் பயணித்தபோது ஈராக்கில் உள்ள தர்பந்த் ஐ பெலுலா என்ற மலையில் கையில் வில் ஏந்தி, இடுப்பில் சிறிய வாள் செருகி, மேலாடை அணியாத அரசன் நிற்பது போன்றும், அவரை ஒருவர் குனிந்து வணங்குவது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வணங்கும் சித்திரம் பகவான் ஹனுமானையும், கம்பீரமாக நிற்கும் சித்திரம் பகவான் ஸ்ரீ ராமரையும் குறிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அந்தக் குழு இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை ஆய்வு நடத்தக் கோரியுள்ளது.

கி.மு 2000-மாவது ஆண்டு காலத்திய சிற்பம் இது என்றும் தெரிவிக்கப்டுள்ளது. அதன் மாதிரியை எடுத்து வந்து அயோத்தியில் ராமர் கோவிலில் வைக்க உத்தரப்பிரதேச அரசுக்கு அக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பரந்து விரிந்த பாரத கண்டத்தின் கடவுளாக பகவான் ஸ்ரீ ராமர் கி.மு 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாங்கப்பட்டு வருவது, இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த சித்திரம் தற்போது இஸ்லாமிய நாடாக இருக்கும் ஈராக் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மேலும் சிறப்பு. அயோத்யாவில் பகவான் ஸ்ரீ ராமரின் கோவில் கட்டப்பட வேண்டும் என்று வலுவான கோரிக்கைகள் கடந்த சில தசாப்தங்களாக எழுந்து வரும் நிலையில், இந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close