செய்திகள்தமிழ் நாடு

திருட்டு மின்சாரத்தில் ஜொலித்த ஸ்டாலின்! ஓசி பிரியாணி, ஓசி பஜ்ஜி, வரிசையில் திருட்டு மின்சாரம்…!

திமுகவினருக்கு ஓசி பிரியாணி சாப்பிடுவது, ஓசி பஜ்ஜி சாப்பிடுவது, பியூட்டி பார்லரில் ரவுடித்தனம் செய்வது. இதெல்லாம் அன்றாட நிகழ்வு. இதுபோலத்தான் மின்சாரம் திருடுவதும். சென்னையில் மின்சாரத்தை திருடியதுதான் திமுகவினரின் லேட்டஸ்ட் சாதனை.

சென்னை சேப்பாக்கத்தில் “தமிழுக்கு திருவிழா” என்ற நிகழ்ச்சி திமுக சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரர் மு.க.தமிழரசு, சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சிக்காக அரசு மின் இணைப்பு பெட்டியில் இருந்து மின்சாரம் திருடி உள்ளது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு புறம் நீதி, நேர்மை என்று யோக்கியன் போல் பேசுகிறார் ஸ்டாலின்.  மறுபுறம் அவர் பங்கு பெறும் விழாக்களுக்கே மின்சாரம் திருடப்படுகிறது. எதிர் கட்சிகயாக இருக்கும்போதே இந்த நிலை என்றால், இவர்கள் ஆளும்கட்சி ஆகிவிட்டால், இவர்களின் அராஜகத்திற்கு அளவே இருக்காகது. 

“திருட்டு மின்சாரத்தில் ஊழலுக்கு திருவிழா” என்று இந்த நிகழ்ச்சியை நடத்தி இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

ஆற்று மணலை திருடியவர்கள், அடுத்தவர்களின் சொத்தை அபகரித்தவர்கள், ஆறு குளங்களை விற்றவர்கள்… இவர்களுக்கு மின் திருட்டு ஒன்றும் பெரிதில்லை, புதிதும் இல்லை என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

Tags
Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close