செய்திகள்தமிழ் நாடு
Trending

காங்கிரஸ் தலைவர் பதிவியை எடுத்துக்கொள்ள யாருமே முன் வராத நிலையில் வேறு வழி இல்லாமல் ராகுல் காந்தியே தலைவராக தொடருகிறார் : மகிழ்ச்சியில் பா.ஜ.க ஆதரவாளர்கள்

காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க எவரும் முன்வராததால் அப்பதவியில் தானே தொடர ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார் என்று தி இந்து செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

மக்களவை தேர்தல் முடிந்து படுதோல்வி அடைந்த காங்கிரஸ், தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்தது. மக்களவை தேர்தல் முடிவுகளின் போது காங்கிரஸுக்கு கிடைத்த படுதோல்வியால் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதை அக் கட்சியின் நிர்வாகிகள் ஏற்க மறுத்து அவரையே அப்பதவியில் தொடர வலியுறுத்தினர். இதற்கு செவிசாய்க்காத ராகுல் தனது ராஜினாமா நிலையில் உறுதியாக நின்றார். கட்சியின் முக்கிய நிர்வாகி களான அகமது படேல், கே.சி.வேணுகோபால் ஆகிய இருவரை தவிர அவர் யாரையும் சந்தித்து பேசவில்லை. இத்துடன் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான புதியவரை தேர்வு செய்யவும் அவர் முன்வரவில்லை.

காங்கிரஸ் தலைவர் பதிவியை எடுத்துக்கொள்ள வேறு யாரும் முன் வராததால் வேறு வழியின்றி ராகுல் காந்தியே தொடர முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்தால் இனி எப்போதும் வெற்றி பா.ஜ.க-விற்கு தான் என்று, பா.ஜ.க ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close