சினிமா

பிக்பாஸ் போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் பெண்..? அலப்பறை ஆரம்பம்..!

பிக்பாஸில் பல சுவாரஸ்சியமான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. அபிராமி- கவினின் காதல், மோகன் வைத்தியாவின் கண்ணீர் என பல சம்பவங்களில் இலங்கை பெண் லொஸ்லியா மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படுவதும் ஒன்று.

ஏற்கனவே 15 போட்டியாளர்கள் உள்ள பிக்பாஸ் வீட்டில் புதிய நபராக மீரா மிதுன் என்ற மாடலிங் பெண் இன்று நுழைந்தார். எப்போதும் புதிய நபர் உள்ளே வந்தால் பழையவர்கள் புரளி பேசுவதும் வந்ததிகளை பரப்புவதும் சகஜம் தான்.

அப்படிதான் மீரா உள்ளே வந்தவுடன் அபிராமியும் சாக்‌ஷியும் புரளி பேச ஆரம்பித்தனர். ஆனால் இவர்கள் இருக்குவருக்குமிடையே இருந்த லொஸ்லியாவை இருவரும் கண்டுகொள்ளவில்லை. முதலில் லொஸ்லியா தான் விலகி போனாலும் அதன்பின் அபிராமியும் சாக்‌ஷியும் அவருடன் பேச்சு கொடுக்கவில்லை. இதனால் இனி வரும் காலங்களில் லொஸ்லியா புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த சம்பவத்தால் லொஸ்லியாவின் ஆர்மி படுவேகமாக பெருகி வருகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close