சினிமாசெய்திகள்

மனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” !!

விதார்த், ஜானவி, சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஆயிரம் பொற்காசுகள்’. அறிமுக இயக்குநர் ரவி முருகையா கைவண்ணத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

இயக்குநர் ஆக வேண்டும் எனும் கனவுடன் 13 ஆண்டு காலம் போராடினாராம் இவர். அதன் பிறகே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வளவு ஆண்டு காலம் காத்திருந்த போதிலும், தமக்கு சினிமா மீது வெறுப்பு ஏதும் வரவில்லை என்கிறார் ரவி முருகையா.

மாறாக, இத்துறை மீதான காதல் அதிகரிக்கவே செய்ததாம். தன்னைப் பொறுத்தவரை திரைத்துறை என்பது திரும்பிச் செல்ல முடியாத ஒருவழிச் சாலை என்று சொல்பவர், இத்துறையில் விரக்தியிலும் ஒருவித மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது என்கிறார்.

இப் படம் குறித்து?

“முன்பு வெளியான ‘முகவரி’ படத்தில் ‘10 அடியில் தங்கம்’ என்ற நீதிக்கதையை நடிகர் ரகுவரன் சொல்வார். அதுதான் இப்படத்துக்கான மூலம் எனலாம். கிராமத்தில் இருக்கும் வெள்ளந்தி மனிதர்கள் பற்றிய கதை. எவ்வளவுதான் பணம், சொத்து, சுகம் இருந்தாலும், கீழே பத்து ரூபாய் நோட்டு கிடந்தால் எடுக்காமல் போக மாட்டோம். மனிதர்களின் ஆசை எப்படியெல்லாம் இருக்கிறது என் பதை இப்படம் பேசும். தஞ்சாவூர் அருகே உள்ள குருவாடிப்பட்டி என்ற கிராமத்தில் முழு படத்தை யும் 38 நாட்கள் படமாக்கினேன்.

“இருப்பதை விட்டுவிட்டு, இல்லாததைத் தேடிப் போவதுதான் ‘ஆயிரம் பொற்காசுகள்’ படக் கதை. அரசின் இலவசப் பொருட் களை வைத்து மட்டுமே வாழ்க்கை நடத்தும் சோம்பேறிதான் சரவ ணன். அரசுத் திட்டத்தில் கழிப்பறை கட்டும்போது, எதிர் பாராத விதமாக ஒரு புதையல் கிடைக்கிறது. அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்கிறார் ரவி முருகையா.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close