இந்தியாசெய்திகள்

உத்திர பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் பா.ஜ.க : முறிந்தது அகிலேஷ், மாயாவதி கூட்டணி

உத்தர பிரதேச மாநிலத்தின் இரு பெரும் கட்சிகளான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கட்சிகள், லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

பா.ஜ.க-வுக்கு பெரும் சவாலாக இந்த கூட்டணி இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மொத்தம் உள்ள, 80 தொகுதிகளில், பகுஜன் சமாஜ், 10 மற்றும் சமாஜ்வாதி, ஐந்து தொகுதிகளில் மட்டுமே வென்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பின், ‘சமாஜ்வாதி தனது தவறுகளைதிருத்திக் கொண்டால், எதிர்காலத்தில் கூட்டணி தொடரும்’ என, மாயாவதி கூறியிருந்தார்.

இந்நிலையில், லக்னோவில் நேற்று அவர் கூறுகையில், நாட்டின் நலனுக்காக, ‘மகா கட்பந்தன்’ என்ற மெகா கூட்டணியை அமைத்தோம். முந்தைய காலத்தில் நடந்தவற்றை, குறிப்பாக எங்கள் கட்சி மற்றும் தலித்களுக்கு எதிராக சமாஜ்வாதி எடுத்த முடிவுகளை மறந்து, அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தோம்.

ஆனால், லோக்சபா தேர்தலுக்குப் பின், சமாஜ்வாதி கட்சியினரின் செயல்பாடுகள் மாறி உள்ளது. அதனால், எதிர்காலத்தில் இவர்களுடன் கூட்டணி அமைத்தால், பா.ஜ.க,வை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாட்டு நலனைக் கருத்தில் வைத்தும், கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் வைத்தும், இனி எதிர்கால தேர்தல்களில், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்”, என்று அவர் கூறினார்.

இதன் மூலம், சமாஜ்வாதி கட்சி உடனான, பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி நிரந்தரமாக முறிந்துள்ளது. இந்நிலையில், பா.ஜ.க மிகவும் பலம் பொருந்திய கட்சியாக மாநிலத்தில் விஸ்வரூபம் எடுக்கப்போவதில் எந்த சந்தேகமும் இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close