இந்தியாசெய்திகள்

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய சொத்துகளின் மதிப்பு எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தியர்கள் பதுக்கிய கணக்கில் காட்டாத சொத்துகளை, தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில், தேசிய நிதி மேலாண்மை நிறுவனம், தேசிய பொது கொள்கை மற்றும் நிதி நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டனர். இது தொடர்பான அறிக்கைகள், மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கைகளை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்பி வீரப்பமொய்லி தலைமையில் நிதிக்கான பாராளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

1980 – ஆம் ஆண்டுக்கும், 2010 – ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கிய கணக்கில் காட்டாத சொத்துகளின் மதிப்பு ரூ.26 லட்சத்து 88 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.34 லட்சத்து 30 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்று தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

தேசிய பொருளாதார மேலாண்மை நிறுவனம், 1990 – ஆம் ஆண்டில் இருந்து 2008 – ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களின் சட்டவிரோத சொத்துகளின் தற்போதைய மதிப்பு ரூ.9 லட்சத்து 41 ஆயிரத்து 837 கோடி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

தேசிய பொதுக்கொள்கை மற்றும் நிதி நிறுவனம், 1997- ஆம் ஆண்டில் இருந்து 2009 – ஆம் ஆண்டு வரை வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களின் சட்டவிரோத சொத்துகளின் மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதம் வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான சொத்துகள் ரியல் எஸ்டேட், சுரங்கம், மருந்துகள், பான் மசாலா, குட்கா, புகையிலை, தங்கம் – வெள்ளி, திரைப்படம், கல்வி ஆகிய துறைகளில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close