செய்திகள்தமிழ் நாடு
Trending

விங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்

சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 2014-ம் ஆண்டு தேர்தலை விட தற்போது 8 இடங்கள் மட்டுமே கூடுதலாக கிடைத்துள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பு இரண்டாவது முறையாக பறிபோய் உள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 சதவீதம் இடங்கள் அதாவது 55 இடங்களைப் பெற்றால்தான் ஒரு கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். காங்கிரஸ் கட்சிக்கு அந்த இடத்தைப் பெற தற்போது 3 எம்.பி.க்கள் குறைவாக உள்ளனர்.

இதைதொடர்ந்து, பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவியை ஏற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறுத்துவிட்டதால் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பெர்ஹாம்பூர் தொகுதி எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.  

இந்த நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “விங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close