அரசியல்செய்திகள்

எடியூரப்பாவுக்கு நல்ல காலம் எப்போது பிறக்கும் ! பாஜக அமைச்சரின் நழுவல் பதில் !!

மத்தியில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அடிக்கடி பேட்டியளித்து வருகின்றனர். அவர்களிடம் தொடர்ந்து கேட்கப்படும் கேள்வி கர்நாடகாவில் எப்போது பாஜக ஆட்சி அமைக்கும், ஓயாது பாடுபட்டுக் கொண்டிருக்கும் எடியூரப்பா எப்போது முதல்வர் நாற்காலியில் அமர்வார் என்பதுதான். அவர்களும் ஏதேதோ பதில் சொல்லிப் பார்த்தும் ஒன்றும் சீக்கிரத்தில் கை கூடிவருகிற மாதிரி தெரியவில்லை.  

இந்த நிலையில் பெலகாவிக்கு வந்திருந்த மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி, நேற்று அளித்த பேட்டி: சட்டசபை இடைத்தேர்தல் விஷயத்தில் பா.ஜ.க, பயப்படவில்லை. காங்கிரஸ் அழிவுப் பாதையை நோக்கி செல்கிறது. எனவே,அக்கட்சியை பற்றி பேச விரும்பவில்லை.பா.ஜ.க,வை ஆட்சியிலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென்ற நோக்கில், காங்கிரஸ் – ம.ஜ.த., கட்சிகள் கூட்டணி வைத்துக்கொண்டனவே தவிர, மாநில மக்களின் நன்மைக்காக அல்ல. மாநில பா.ஜ.க, தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, முதல்வராகும் விஷயத்தில் என்னால் பதில் அளிக்க முடியவில்லை. இது தொடர்பாக வரும் நாட்களில் அவரே பதிலளிப்பார், இனிமேல் அவரிடமே இது சம்மந்தமாக கேட்டுக் கொள்ளுங்கள், என்னிடம் என்னுடைய இலாகா பற்றி மட்டும் கேளுங்கள்  என்றார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close