சமூக ஊடகம்தமிழ் நாடு
Trending

தொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் ?

நடுநிலை ஊடகங்கள் போல் காட்டிக்கொள்ளும் அரசியல் சார்புடைய ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தை மறந்து அரசியல் லாபம் ஈட்டுவதற்காக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அந்த வகையில், பிரதான தமிழ் ஊடகங்கள் ஊடக தர்மத்தை மறந்து, போலி செய்திகளையும், திரிக்கப்பட்ட செய்திகளையும் பதிவிடும் போது, அதன் உண்மை நிலையை விளக்கும் பொருட்டு கதிர் செய்திகள் இணையதளத்தில் பல ஊடக பொய்களை தோலுரித்து காட்டியுள்ளோம்.

ஊடகங்கள் நடுநிலையாக செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி ஆகியோர் வெளிப்படையாக கூறி வருகின்றனர். பா.ம.க இனி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் தான், நேற்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலுக்கு சட்டமன்ற மற்ற நாடாளுமன்ற தேர்தலை போன்று முக்கியத்துவம் அளித்தது தமிழக ஊடகங்கள். இதனால் மக்கள் எதிர்கொள்ளும் சில முக்கிய பிரச்சனைகள் திசை திருப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர். இதனையடுத்து தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹேஷ்டேகில் ட்விட்டர் வாசிகள் பதிவிட்டு இந்த ஹேஷ்டேகை தேசிய அளவில் முதல் ட்ரெண்டிங்காக ஆக்கியுள்ளனர். இதனால் ட்விட்டரில் எப்போதும் உற்சாகமாக அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்தும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை தாங்கி பிடித்தும் பதுவிட்டு வந்த சில பத்திரிகையாளர்கள் இன்று ட்விட்டர் பக்கமே தென்படவில்லை.

இதனை அடுத்து, தேசிய அளவில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங். இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் தமிழக ஊடகங்கள் நடந்து கொள்ளுமா என்ற கேள்வி இணையவாசிகள் இடையே எழுந்துள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close