இந்தியாசெய்திகள்

சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் மோடி! பிரதமர் அலுவலகத்தின் துரித நடவடிக்கை!

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர், சுமர் சிங். அவரது மகள் நீண்ட நாட்களாக ரத்தச்சோகை (aplastic anemia) நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய ரத்த செல்கள் உற்பத்தி ஆகாது. மேலும், அவர்களுக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது. உரிய சிகிச்சை இல்லாவிட்டால் உயிரிழப்பும் ஏற்படும்.

நோயை குணப்படுத்த, சுமார் சிங் பல மருத்துவமனைகளுக்கு சென்றும் பலனில்லை.. இறுதியில், சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் காப்பாற்றப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்ய, சுமார் சிங் முடிவெடுத்தவுள்ளார். தன்னிடம் உள்ள நிலங்களை வைத்து பணத்தை ஏற்பாடு செய்துள்ளார். அறுவைசிகிச்சை செய்ய 10 லட்சத்துக்கும் அதிகமாகச் செலவாகும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இது சமந்தமாக பிரதமர் அலுவலுக்கத்திற்கு கடித்ததை அனுப்பியுள்ளார் சுமார் சிங் அக்கடிதத்தில் “என் மகள் உயிர் வாழ்ந்தால் மட்டுமே மட்டுமே எங்களுக்கு வாழ்வு. அவளும் இல்லை என்றால் நாங்கள் சாவதைத் தவர வேறு வழி தெரியவில்லை. மகளின் மருத்துவச் செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம், பிரதமர் அலுவலகத்துக்கு கிடைக்க பெற்றதும், உடனடியாக சிறுமியின் மருத்துவச் செலவுக்கு 30 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது பிரதமர் அலுவலகம் .அந்தப் பணம், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

Tags
Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close