அரசியல்செய்திகள்

பா.ஜ.க-வில் இணைந்தார் அமைச்சர் ஜெய்சங்கர் !!

புதுடில்லி; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முறைப்படியாக பா.ஜ.,வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை 2வது முறையாக பதவி ஏற்றது.

அமைச்சரவையில், தமிழகத்தை சேர்ந்த புதுடில்லியில் பிறந்த சுப்ரமணியம் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றார். இவர் ஏற்கனவே, இந்தியாவின் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்க துாதராக பணியாற்றியவர். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

பா.ஜ.வில் உறுப்பினரல்லாத ஜெய்சங்கரை அமைச்சராக மோடி நியமித்தது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இன்று அவர், புதுடில்லியில் உள்ள பா.ஜ.,வின் தலைமை அலுவலகம் சென்று தன்னை முறைப்படி பா.ஜ.,வில் இணைத்துக்கொண்டார்.
அவருக்கான உறுப்பினர் அட்டையை வழங்கி, பா.ஜ.,வின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா வாழ்த்தினார்

Source : https://www.dinamalar.com/news_detail.asp?id=2305121

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close