செய்திகள்தமிழ் நாடு

தமிழக ஊடகங்களின் நடுநிலைத்தன்மையை வெளுத்து வாங்கிய-மருத்துவர் இராமதாஸ்!

தமிழக ஊடகங்கள் கடந்த சில வருடங்களாக செய்திகளை நடுநிலைதன்மை இல்லாமல் வெளியிட்டு வருகின்றனர். விவாதங்களை நடத்தும்போதும் இவ்வாறே பாகுபாட்டோடே நடத்தி வருகின்றனர். ஊடக தர்மத்துக்கு மாறாகவே நடந்து கொண்டு வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க- வுடன் கூட்டணி வைத்தபோது பா.ம.க-வின் இளைஞரணி தலைவர்அன்புமணி ராமதாஸிடம் வரம்புகளை கடந்து கேள்வி கேட்டனர். ஆனால், ம.தி.மு.க- வின் தலைவர் வைகோ சில வருடங்களுக்கு முன் தி.மு.க-வையும், தி.மு.க- வின் முன்னாள் தலைவர் கருணாநிதியையும், திமுகவின் தற்போதய தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக தரக்குறைவாக விமர்சித்த பிறகு அவர் மீண்டும் தி.மு.க-விடமே கூட்டணி வைத்தபோது ஊடகங்கள் வைகோவிடம் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை.ஏன் திருமாவளவன் இலங்கை தமிழர் பிரச்சனையில் 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தான் காரணம் என கூர் வந்த நிலையில் காங்கிரஸிடம் கூட்டு சேர்ந்தார் அதை பற்றி கேள்வியோ விவாதமோ நடத்தப்படவில்லை. காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தால் பிரச்சாரம் செய்யமாட்டேன் என கூறிய கூறிய ஸ்டாலினிடம் கேள்வி கேட்கவில்லை விவாதமும் நடத்தவில்லை.

ஊடகங்களின் பாகுபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்ட கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்ந்தது. தேர்தலுக்கு பிறகு நடந்த தொலைக்காட்சி விவாதங்களிலும் இது நீடித்தது. இது குறித்து இராமதாஸ் அவர்கள் ஊடகங்கள் குறித்து ட்வீட் ஒண்டு பதிவிட்டுள்ளார் அதில் “செய்தித் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்களில் நடுநிலையையும், அறத்தையும் பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டியிருக்கிறது. ஊடகங்களில் நடுநிலை திரும்பும் வரை ஊடக விவாதங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள்.” என கூறியுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close