இந்தியா

தேர்தலில் தோற்ற விரக்தியில் போலி செய்தியை பரப்பும் காங்கிரஸ் – பிரதமர் மோடி திறந்த பாலம் இடிந்ததா.? உண்மையில் நடந்ததை நீங்களே பாருங்கள்.! #factcheck

மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று மாதங்களுக்கு முன் திறந்து வைத்த பாலம் அதற்குள் இடிந்து விழுந்து விட்டது என கூறும் பதிவு புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் லைக் செய்திருக்கிறார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவுகளில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், வைரல் பதிவில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் இடிந்து விழுந்ததாக கூறப்பட்ட பாலம் குஜராத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது ஆகும்.

மேற்கு வங்க காங்கிஸ் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில்: நரேந்திர மோடி அறிவித்த திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டு பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட ஜாம்நகர்-ஜூனாகர் நெடுங்சாலை பாலம், மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்து விட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரலாகும் புகைப்படத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இந்த பாலம் ஜூன் 19 ஆம் தேதி இடிந்து விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பாலத்தை மூன்று மாதங்களுக்கு முன் நரேந்திர மோடி திறந்து வைக்கவில்லை. வைரல் பதிவுகளில் கூறப்படும் இடிந்து விழுந்த பாலம் கட்டமைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.

இந்த பாலத்தை கட்டமைக்க கற்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற கட்டுமானங்களில் கற்களை பயன்படுத்தும் வழக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டது. தற்போதைய கட்டுமானங்களில் கான்க்ரீட் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் இடிந்து விழுந்த பாலத்தை நரேந்திர மோடி மூன்று மாதங்களுக்கு முன் திறந்து வைக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படும் போலி செய்திகள் அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை ஆகும். பல சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் போலி செய்திகளை எதிர்கொண்டால் அவற்றை பரப்பாமல் இருப்பது அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வழி செய்யும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close