செய்திகள்

ராஞ்சியில் பிரமாண்ட யோகா பயிற்சி! பிரதமர் மோடியுடன் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு!!

பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபையில் 2014 – ஆம் ஆண்டு செப்டம்பர் 27 – ஆம் தேதி பேசியபோது, இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகா கலையின் மேன்மை பற்றி விளக்கினார். மேலும் சர்வதேச யோகா தினத்தை அறிவித்து கொண்டாட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அதன்பயனாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 – ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐநா சபை அறிவித்தது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 – ஆம் தேதி சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு இன்று உலகெங்கும் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தன. 

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடந்த பிரமாண்ட யோகா நிகழ்ச்சி்க்கு பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதில் 40 ஆயிரம் பேர் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: –

யோகா மனித வாழ்வில் மிக முக்கிய அங்கமாகும். யோகா உடல் நலம், ஆரோக்கியத்திற்கு மிக அவசியமானது. யோகாவை அனைவரும் நாள்தோறும் செய்ய வேண்டும். தற்போது இதய நோய் பெருகி வருகிறது. யோகா மூலம் இதய நோய் கூட குணமாகும். யோகா மூலம் மனம், உடல் ஒரு நிலைப்படுகிறது. யோகா நமது கலாசாரத்தின் ஒரு அங்கம் ஆகும்.

நாம் ஒன்றாக இணைந்து யோகாவின் பயன்களை அனைவருக்கும் பரப்ப வேண்டும். யோகாவின் சிறப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் பங்கு வகிக்கிறது. யோகாவின் நன்மைகள் ஏழைகளை சென்றடைய வேண்டும். 

யோகா கலாசாரம், எல்லை கடந்து செல்லக்கூடியது. யோகாவின் நன்மைகளை உலக நாடுகள் அநுபவித்து வருகிறது. யோகா மக்களை ஒன்றிணைக்கிறது. அமைதி, மனிதநேயத்தை யோகா வளர்க்கும். அனைவரும் தவறாமல் யோகா செய்ய வேண்டும். 

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close