செய்திகள்

வங்கிகள் – அரசு நிறுவனங்களிலும் ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப முடிவு! “டிமிக்கி” ஆசாமிகளுக்கும் ஆபத்து! பிரதமர் நரேந்திர மோடி அடுத்த அதிரடி!!

வங்கிகள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்கவும், வேலை செய்யாமல் டிமிக்கி கொடுத்து வருபவர்களை அடையாளம் கண்டுபிடித்து நீக்கவும் பணியாளரின் பணித்திறன் மற்றும் பணிக்காலம் ஆகியவற்றை ஆய்வு செய்ய நரேந்திர மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து அரசுத்துறை செயலாளர்களுக்கும் மத்திய பணியாளர் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. மத்தியப் பணியாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருபதாவது : –

அனைத்து துறைகளின் செயலாளர்களும் தங்கள் துறையில் பணியாற்றும் பணியாளரின் பணித்திறன், பணிக்காலம் ஆகியவற்றை சட்டத்திற்கு உட்பட்டு குறிப்பிட்ட கால இடைவேளியில் ஆய்வு செய்ய வேண்டும்.  ஒரு ஊழியரின் பணி சரியில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவரை ஓய்வுபெற செய்ய உத்தரவிடும்போது அது தன்னிச்சையாக பிறப்பிக்கும் உத்தரவு கிடையாது. அதற்கான உறுதியான காரணம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். 

இந்த ஆய்வுகளை அரசுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், அரசின் சுயாட்சி நிறுவனங்கள், நிர்வாகத்தில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை பணியாளரின் பணிக்காலத்துக்கு முன்பாக ஓய்வுபெற செய்வது என்பது  பொதுநலன் கருதிதான் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவேண்டும். ஒரு பணியாளரை பிடிக்கவில்லை என்பதற்காக உயர் அதிகாரிகளால் தன்னிச்சையான முறையில் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வரும் ஜூலை 15 -ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு துறையும் 15 நாட்களுக்கு ஒருமுறை ஊழியர்கள் குறித்த அறிக்கை தயார் செய்து அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close