செய்திகள்

வெளிநாட்டில் இருந்தபடி வாட்ஸ்ஆப் மூலம் முத்தலாக்! மோடி அரசின் முத்தலாக் தடை சட்டத்தால் நடவடிக்கை பாய்ந்தது!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சத் மாவட்டத்தின் சஞ்சன் பகுதியை சேர்ந்தவர் பர்ஹிம். (வயது 26). இவரது கணவர் ஜெய்லுன் கலியா. வெளிநாட்டில் கப்பல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். 

ஒரு மாதத்திற்கு முன்பு பர்ஹிம்முக்கு அவரது கணவர் ஜெய்லுன் கலியா வாட்ஸ்ஆப் மூலம் 3 முறை தலாக் அனுப்பி உள்ளார். 

இந்த முத்தலாக்கை பிரிண்ட் அவுட் எடுத்த கலியாவின் பெற்றோர்களான ஜாவித் மற்றும் நபிசா ஆகியோர் உள்ளூர் ஜமாத்தில் அளித்துள்ளனர். ஜமாத் மூலம் பர்ஹிமிற்கு விவாகரத்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை ஏற்க மறுத்த பர்ஹிம் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜூன் 14 – ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, கலியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

கலியா வெளிநாட்டில் உள்ளதால் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கலியா குறித்து விசாரித்தபோது, அவர் துபாயில் உள்ளதாக கூறி உள்ளனர். ஆனால் உண்மையில் கலியா, கனடா நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

கலியா தனது தலாக் நோட்டீசில், தனது மகனை, குழந்தையில்லாத தனது சகோதரியிடம் ஒப்படைத்து விட்டு பர்ஹிம் விவாகரத்து கொடுத்து விட்டு, விலகிச் சென்றுவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ஜமாத் அமைப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து வெளிநாட்டில் உள்ள கலியாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியால் முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு்ள்ளதால், இளம்பெண் பர்ஹிமுக்கு நீதி கிடைக்கிறது. இல்லாவிட்டால் அவர் வாழ்கையை இழந்திருப்பார்.

Source : https://www.dinamalar.com/news_detail.asp?id=2302170

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close