செய்திகள்

“வளர்ச்சி பாதையில் இந்தியாவின் பயணம் தொடரும்” – நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை!!

பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: –

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்துக்கள். மீண்டும் ஒருமுறை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்து மக்கள் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் வளர்ச்சிப் பாதையில் இந்தியாவின் பயணம் தொடரும்.

மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள இந்த அரசு, மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடும். தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. வரி செலுத்தும் முறை தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

விவசாய துறையில் ரூ.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே, ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகள் தற்போது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை சிறு தொழில் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுகிறது.

இவ்வாறு குடியரசு தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close