செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு எதிரொலி! மத்திய அமைச்சர்கள் காலை 9.30 மணிக்கு முன்பே பணிகளை தொடங்குகின்றனர்!!

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது அதிகாரிகள் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே இவர் அலுவலகத்துக்கு வந்து விடுவார். பிரதமர் ஆனபிறகும் இதே நடைமுறையை பின்பற்றி வருகிறார். இப்போது 2 – வது முறையாக பிரதமர் பதவி ஏற்ற நரேந்திர மோடி சக அமைச்சர்களும் காலை 9.30 மணிக்கு முன் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவைத்தொடர்ந்து அனைத்து மத்திய அமைச்சர்களும் காலை 9.30 மணிக்கு முன்பே அலுவலகம் வந்து விடுகிறார்கள். 

மத்திய அமைச்சர், முக்தர் அப்பாஸ் நக்வி தினமும் தனது வீட்டில் பொதுமக்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். காலை 10 மணியில் இருந்து அவர் பொதுமக்களை சந்திப்பார். அது முடிந்ததற்கு பிறகுதான் அலுவலகம் வருவார். ஆனால் இப்போது அவர் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு, காலை 9.30 மணிக்கு முன்பே அலுவலகம் வந்து விடுகிறார்.

மூத்த அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானும், இதற்கு முன்பு தாமதமாக அலுவலகம் வருவார். இப்போது காலை 9.30 மணிக்கு முன்பே அலுவலகம் வந்து விடுகிறார். தினமும் காலையில் குறிப்பிட்ட அதிகாரிகளை அழைத்து ஆலோசனையில் ஈடுபடுகிறார். தனது அலுவலக வாசலில் தனது துறை பற்றிய தகவல்கள் மக்களுக்கு தெரியும் வகையில் கம்ப்யூட்டர், பலகை பொருத்த உத்தரவிட்டுள்ளார். அதில் தொடு திரை மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

மத்திய அமைச்சர்கள் ஹர்சவர்த்தன், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் 9.30 மணிக்கு முன்பாகவே அலுவலகம் வந்து விடுகிறார்கள். புதிய அமைச்சர்கள் கஜேந்திர சிங் உள்பட பல புதிய அமைச்சர்கள், 9.30 மணிக்கே தங்களது பணிகளை தொடங்கி விடுகின்றனர்.

அதே போல மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா அதிக ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார். பிரதமர் மோடி அனைத்து மந்திரிகளும் அடுத்த 100 நாளில் என்ன செய்யப்போகிறோம் என்பதை திட்டங்களாக உருவாக்கி அதை செயல்படுத்த வேண்டும் என்றும் தனது உத்தரவில் கூறி இருந்தார். அதற்கான திட்டங்களை உருவாக்குவதில் அர்ஜூன் முண்டா தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

மேலும் கேபினட் அமைச்சர்கள் தங்களுக்கு கீழ் உள்ள ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களுக்கு அதிக அளவில் பணிகளை பிரித்து கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். அதன்படி பல அமைச்ர்களும் தங்களுக்கு கீழ் உள்ள அமைச்சர்களுக்கு அதிக கோப்புகளை அனுப்பி வருகிறார்கள்.

இதனால், காலை 9.30 மணிக்கு முன்பே அனைத்து மத்திய அமைச்சர்களின் அலுவலகங்களும் பரபரப்பாகிவிடுகிறது.

Source : https://www.maalaimalar.com/news/topnews/2019/06/19110620/1247059/PM-Modi-order-echo-central-ministers-reach-office.vpf

Tags
Show More

One Comment

  1. ஒவ்வொருவரும் மோடியைப் போல் உழைத்தால், நாடு முன்னேறும். நாட்டிற்குத் தேவை நேர்மையான அரசியல்வாதிகள். அரசியல்வாதிகள் நேரிமையாக இருந்தால், மக்கள் அரசியல் தலைவர்களை பின்பற்றுவார்கள். ஐம்பது வருடம் கழித்து, தமிழ்நாட்டில் காமராஜ் போன்ற தலைவர்களின் அருமை தெரிகிறது. தீவிரவாதிகளால் அவதிப்படும் நம் நாட்டில், சர்தார் படேல் அவர்களின் மதிப்பு நமக்கு இப்பொழுது தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close