செய்திகள்தமிழ் நாடு
Trending

தி.மு.க-வை விமர்சிக்கிறாரா சகாயம் ஐ.ஏ.எஸ்? : 20 ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கை சமர்பித்தும் அரசு நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் பெரும் அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன. இது குறித்து, சகாயம் ஐ.ஏ.எஸ் பேசுகையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசின் மெத்தனபோக்கே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சகாயம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே, தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் தான் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தேன் என்றும் அதை அரசு செய்யும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார் என்றால், 1999 ஆம் ஆண்டிற்கு முன்பு நடந்த ஆட்சியை தான் குறிப்பிடுகிறார். அப்படியென்றால் அது 1996 முதல் 2001 வரை நடந்த ஆட்சியாகத்தான் இருக்க முடியும். தமிழ்நாட்டின் பதினோறாவது சட்டமன்றத் தேர்தல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, கலைஞர் கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னரே அறிக்கை சமர்ப்பித்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கூறியிருப்பது, கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியை தான் சொல்லுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close