அரசியல்செய்திகள்

உதயநிதியை இளவரசன் ஆக்க மு.பெ.சாமிநாதனிடமிருந்து திமுக இளைஞர் அணி பதவி பறிப்பு !! பகுத்தறிவுத் தொண்டர்கள் கொதிப்பு !!

திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். இதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சரான வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதனிடமிருந்து பறிக்கும் வகையில் அவரிடமிருந்து ராஜிநாமா கடிதம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

திமுகவில் உள்ள அணிகளில் மிக முக்கியமான அணி இளைஞரணி. இதன் செயலாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின் இருந்து வந்தார்.
 2017-இல் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் போனதால், செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2017 ஜனவரி மாதம் இளைஞரணிச் செயலாளராக வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டார். 

இவர் 2006-11-ஆம் ஆண்டு கால திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

பிரசாரத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டதாக கூறி திமுக தலைமையை மற்ற நிர்வாகிகள் ஐஸ் வைத்தனர்.  இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளைக் கைப்பற்றியது திமுக.

அதைத் தொடர்ந்து, நாமக்கல், திருச்சி,  தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் திமுகவின் கூட்டத்தில் உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வாய்மொழி உத்தரவு
பிறப்பிக்கப்பட்டதாம். கனிமொழி தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்திலும்  தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் கொடுக்கப்பட்டதாம்.

இந்த நிலையில் தற்போதைய இளைஞரணிச் செயலாளரான மு.பெ.சாமிநாதனின் செயல்பாடுகள் எதுவும் சரியில்லை என்று குற்றம் சாட்டி ஒரு கூட்டம் அவருக்கு அழுத்தம் கொடுத்து வந்ததை அடுத்து, இப்போது தானாகவே இராஜினாமா கடிதத்தை ஸ்டாலினிடம் மு.பெ.சாமிநாதன் அளித்துவிட்டார். வெகு விரைவில் உதயநிதி இளவரசராக பொறுப்பேற்றுக் கொள்வதுடன், நான்குநேரி தொகுதி இடைத்தேர்தலிலும் அவரை வேட்பாளராக்க தலைமை யோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Source:

 https://www.dinamani.com/tamilnadu

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close