செய்திகள்தமிழ் நாடு
Trending

தஞ்சையில் கற்பக விநாயகர் கோவில் கட்டிட பணியை தடுத்து நிறுத்திய கிறிஸ்துவர்கள் : களத்தில் இறங்கிய இந்து முன்னணி

தஞ்சை புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள நிர்மலா நகர் பகுதியை சேர்ந்த குடியிருப்போர்களுக்காக அங்கு பொது இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தின் ஒரு பகுதியில் நிர்மலா நகர் குடியிருப்போர் சங்கத்தினர் கற்பக விநாயகர் கோவில் கட்ட முடிவு செய்தனர். இதற்காக அங்கு 2 மாதத்திற்க்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி கட்டிடம் கட்டுவதற்காக குழிதோண்டும் பணி நடைபெற்றது. அப்போது கிறிஸ்துவர்கள் அங்கு வந்து, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது. அதில் அனுமதி இல்லாமல் கோவில் கட்டுவதாக காவல்துறையிடம் புகார் செய்தனர். பின்னர் காவல்துறை அங்கு வந்து கட்டிட பணியை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து குடியிடிருப்போர் நல சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் சிவசாமி பிரகதீஸ்வரர், துணைத்தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சக்திவேல் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த மோகனசுந்தரம், ஈசானசிவம், பாலமுருகன் மற்றும் குடியிருப்பு வாசிகளும் திரண்டனர். இந்து முன்னணி போராட்டம் அறிவித்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தாசில்தார் அருணகிரி சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரிடமும் அந்த இடம் தொடர்பான ஆவணங்களை காண்பியுங்கள் என்று தெரிவித்தார். அப்போது குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அந்த இடம் தொடர்பான ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்தனர். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த கிறிஸ்துவர்கள், மாலையில் ஆவணங்களை கொண்டு வந்து காண்பிப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தினத்தந்தியிடம் கூறுகையில், “நிர்மலா நகர் பகுதியில் குடியிருப்பவர்களுக்காக பொதுவான இடமாக 3 இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு இடமான 2,800 சதுரஅடி உள்ள இடத்தின் ஒரு பகுதியில் கோவில் கட்ட முயற்சி செய்தோம். அதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது தங்களுக்கு சொந்தமான இடம் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகிய இடங்களில் வழக்கு தொடர்ந்தும் அந்த இடம் குடியிருப்போர் நல சங்கத்துக்கு சொந்தமானது என உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நாங்கள் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த இடத்துக்கான முறையான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது”, என்று கூறியுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் முடிந்து தி.மு.க அதிக இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே இது போன்ற மத வெறி சம்பவங்கள் ஹிந்துக்களுக்கு எதிராக நடப்பது தமிழக ஹிந்துக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close