செய்திகள்

பெட்ரோலியப் பொருட்கள் விலை தொடர்ந்து சரிந்து வருவதேன்? மேலும் குறையுமா? …நிபுணர்கள் பதில் !!

பெட்ரோலியப் பொருள்களுக்கான கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து இரண்டு வாரங்களாக சரிந்து விற்பனையாகி வருகின்றது. கடந்த வாரத்தின் ஆரம்ப நாட்களில் விலை சரிந்த போதிலும் வார இறுதி நாளான வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் விலை உயர்ந்து காணப்பட்டது.

இதற்கு காரணம் ஈரான் நாட்டின் ஆயில் டேங்கர் தாக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பார்வை ஆகியவற்றால் விலை சற்று உயர்ந்தது. கடந்த இரு வாரங்களாக ஒரு பேரல் விலை 50 டாலருக்கு அதிகமாகாமல் வர்த்தகமாகி வருகிறது.

இதற்கு காரணம் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி மற்றும் கடந்த வாரங்களில் வெளிவந்த இருப்பு விவரத்தில் எண்ணெய் இருப்பு அதிகமாகி இருப்பது போன்ற காரணங்களால் விலை இறக்கம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறினர்.

வரும் வாரங்களில் இதற்கு கீழ் விலை சரிவு ஏற்பட்டால் மீண்டும் விலை சரிவு தொடரும் என எதிர்பார்க்கபடுகிறது. எண்ணெய் உற்பத்தி நாடுகள் விலையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பரில் உற்பத்தியை குறைப்பது என முடிவு எடுத்தன. இந்த குறைப்பு நடவடிக்கை நடப்பு ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

தற்போது எண்ணெய் விலை சரிவை கண்டு வருகிறது. இந்நிலையில் ஒருங்கிணைந்த கூட்டத்தில் விலை சரிவினை கட்டுப்படுத்த உற்பத்தி குறைப்பை மேலும் அதிகரிப்பதா அல்லது தற்போது உள்ள நிலையை மேலும் தொடருவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும். உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close