தமிழ் நாடு

அடுத்தவர்களின் உழைப்பை அட்டை போல உறிஞ்சும் காங்கிரஸ் : போட்டோ ஷாப்பால் தூர்வாரப்பட்ட குளம் – ஆதாரத்தோடு அம்பலமான மோசடி.!

காஞ்சிபுரம் மாவட்டம் ,செவிலிமேடு கிராமத்தில் அமைந்துள்ளது ராமானுஜர் சன்னதி.இதன் அருகில் உள்ள இந்த குளம் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீ ராமானுஜரின் 1000 ம் வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக , E.F.I-தன்னார்வ தொண்டு நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று சீரமைத்தது.

சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை சீரமைக்கும் பணியை 20 நாட்களாக மேற்கொண்டனர். குளத்தில் உள்ள சீமை கருவேலம் மற்றும் இதர பல குப்பைகள் அகற்றபட்டு,குளம் தூர்வாரப்பட்டு, அந்த மணலை வைத்து கரைகள் பலப்படுத்தப்பட்டது.

இந்த செயல் மூலம், குளத்தின் கொள்ளளவு அதிகரித்து நீர் தேக்கும் வசதி பெருகியது. குளத்தின் கழிவுகள் அகற்ற பட்டு சுத்தம் செய்ததினால் சுகாதார சீர்கேடு தவிர்க்கப்பட்டது. கரைகளை பல படுத்த பனை மர கண் உட்பட உள்ளூர் மர கன்றுகள் நடப்பட்டு பல்லுயிரின பெருக்கத்துக்கு வழிவகுக்கப்பட்டது.

E.F.I-தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் 2017 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த பணியை தாங்கள் செய்ததாக கூறி போலி பிரச்சாரம் செய்து வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். 2017 ஆம் ஆண்டில் E.F.I-தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் தொடர்பான புகைப்படத்தை இணையதளத்தில் இருந்து திருடி, அதனை தாங்கள் செய்தது போல, சில பல போட்டோஷாப் வேலைகளை செய்து சமூகவலைதளங்களில் பரவவிட்டு வருகின்றனர்.

கீழே உள்ள புகைப்படம் 2017ல் எடுக்கப்பட்டது.

E.F.I-தன்னார்வ தொண்டு நிறுவன புகைப்படம்

அடுத்து வரும் புகைப்படம் காங்கிரஸ் கட்சியினரால் போலியாக சித்தரிக்கப்பட்டது.

அடுத்தவரின் உழைப்பை திருடிய காங்கிரஸ்சின் போலி படம்.

இப்படி பல மக்கள் நல திட்டங்களை நல்ல மனம் படைத்த சிலர் செய்து வரும் நிலையில், அதிலும் தங்களுடைய அரசியல் சாயத்தை புகுத்தி, மக்களிடம் தாங்கள் தான் எல்லாம் செய்கிறோம் என்பது போன்ற போலி தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர், ஒன்றை சமூக வலைத்தளத்தில் காண்கிறோம் என்றால், கண்மூடித்தனமாக அதனை நம்பாமல் உண்மை தன்மை ஆராய்ந்து தகவலை உள்வாங்கி கொள்ள வேண்டும்.

ஆதாரம்: https://efiblog.org/2017/05/04/celebrating-a-1000-years-of-the-ramanujar-pond/

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close