இந்தியாசெய்திகள்

பெண் காவலர் சௌம்யாவை கத்தியால் குத்தி படுகொலை செய்து சடலத்தை எரித்த அஜாஸ் என்ற ஆண் காவலர் : பிணராயி ஆளும் கேரளத்தில் கொடூரம்

பிணராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவில், அரசியல் ரீதியான படுகொலைகள் சாதாரணமாக நடக்கும். ஆனால், தற்போது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவமாக, சௌம்யா புஷ்கரன் என்ற பெண் காவலரை, அஜாஸ் என்ற ஆண் காவலர் படுகொலை செய்து, சடலத்தை பெட்ரோல் ஊற்றி கொளுதியுள்ளார். இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள வள்ளிகுன்னம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் சௌமியா புஷ்கரன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர் என்றும் இவரது கணவர் புஷ்கரன் அரபு நாட்டில் பணியாற்றி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை மாலை இவர் பணி முடித்து, 4 .30 மணி அளவில் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றும் அஜாஸ் என்பவர் தனது காரால், சவுமியா மீது மோதியதில் சௌமியா நிலை தடுமாறி கீழே விழுந்ததும், காரில் இருந்து கத்தியுடன் இறங்கிய அஜாஸ், சௌமியாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் மீண்டும் விரட்டி சென்று சௌமியாவை பலமுறை கத்தியால் குத்தி ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்துள்ளார் அஜாஸ்.

ஒரு பெண் காவலரை கத்தியால் குத்தி படுகொலை செய்த பின்னும் ஆத்திரம் அடங்காத அஜாஸ் காரில் இருந்து பெட்ரோலை எடுத்து வந்து சௌமியாவின் சடலத்தின் மீது ஊற்றி தீவைத்து எரித்ததாக கூறப்படுகின்றது. அப்போது பெட்ரோல் பட்டதால் அஜாஸ் மீதும் தீபற்றியது. இதனால் ஆடையில் தீ பற்றிய நிலையில் அங்கும் இங்கும் ஓடி இறுதியில் ஆடைகளை கலைந்து உயிர் தப்பிய அஜாஸை மடக்கி பிடித்த அக்கம்பக்கத்து வீட்டார் தர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர்.

40% தீக்காயம் ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து அஜாஸை மீட்டனர். அவரது உடலிலும் தீக் காயங்கள் காணப்பட்டதால் அவரை ஆலப்புழை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே எரிந்த நிலையில் கிடந்த பெண் காவலரின் சடலத்தை மீட்டு உடற் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

எர்ணாகுளத்தில் பணியாற்றும் காவலர் அஜாஸ்சுக்கும், 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆலப்புழையில் பணியாற்றும் பெண் காவலருக்கும் எப்படி பழக்கம் உருவானது. இந்த படுகொலைக்கான பின்னணி என்ன ? எதற்காக சவுமியாவை அஜாஸ் கொலை செய்தார் ? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த படுகொலைக்கு மத ரீதியான காரணங்கள் ஏதேனும் இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த கொடூர கொலை சம்பவம் பொதுமக்களிடையேயும், காவல்துறையினர் மத்தியிலும் கடும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close