தமிழ் நாடு
Trending

ஒட்டப்பிடாரத்தில் மிக பெரிய மருத்துவ முகாமை நடத்தி அசத்திய டாக்டர் தமிழிசை !

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். தான் தோற்றபோதும், தொகுதி மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்

தேர்தல் பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி குலசேகரநல்லூர் கிராமத்து மக்கள் அவரிடம் அப்பகுதியில் சிறுநீரகப்பிரச்சினை மற்றும் உடல்நலக் குறைபாடுகள் அதிகமாக உள்ளது என்று கூறி மருத்துவ உதவிகேட்டு கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கோரிக்கை ஏற்று இன்று மாபெரும் இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார். தொடங்கிவைத்த பிறகு மக்களுக்கான தனது மருத்தவ உதவியை செய்தார். அவருடைய கணவர் மற்றும் மகன் இந்த முகாமில் பங்கேற்று தங்களது உதவியை செய்தனர்.

தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் நாட்டு மக்களுக்கு ஆற்றும் சேவையை தொடர்கின்றனர் பா.ஜ.க வினர். இதே போன்று, 2014 தேர்தலில் அமேதியில் தோற்ற போதும், ஸ்ம்ரிதி இரானி அவர்கள் தொடர்ந்து அமெதிக்கு சென்று அவர்களுக்கு உதவி வந்தார். இதன் விளைவு என்று அவர் அமேதியில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close