இந்தியாசெய்திகள்தமிழ் நாடு

ஆக ஸ்டாலினால் 2024 வரை முதல்வராக முடியாதா? பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்?

நாடாளுமன்றம் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் நிபுணர்கள் சமீபகாலமாக கருத்து தெரிவித்து வந்தனர். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து இதற்கு ஒப்புதல் அளித்தால் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் கமிஷனும் கூறியிருந்தது.
இதுகுறித்து ,பிரதமரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூறியதாவது:-

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பா.ஜ.க உள்பட பல மாநிலங்களின் ஆட்சிக்கு இழப்பு ஏற்படலாம். ஆனால் அரசியல் கட்சிகள் குறுகிய நோக்கத்துடன் அதை பார்க்காமல் தேசிய நலனை கருத்தில் கொண்டு இதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். ஒரு கட்சியோ அல்லது ஒரு ஆட்சியோ இதை தீர்மானிக்க முடியாது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தொடர்ந்து தேர்தல் நடத்துவதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ரூ.1,100 கோடிக்கு மேல் செலவு ஆனது. 2014-ம் ஆண்டு தேர்தலில் அது ரூ.4 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டது. மேலும் பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உழைப்பு வீணாகிறது. தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்வி பாதிக்கப்படுகிறது. பாதுகாப்பு படையினரை தேர்தல் பணிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் நம் தேச பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. எனவே இதற்கு தீர்வு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

மத்திய திட்டக்குழுவான நிதி ஆயோக் அமைப்பும் இதற்கு ஆதரவு தெரிவித்தாது. ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக பிறகட்சி தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது அனைத்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களும் சேர்த்து நடத்த முடியாமல் போனது.

இந்நிலையில், பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் வரும் 19-ம் தேதி நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நாட்டின் எதிர்கால நலன்கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளதால் உங்களது கருத்துகளை தெரிவிக்க அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார். அவ்வாறு நடந்தால் 2024 தான் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் அதுவரை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படாது ஆகா ஸ்டாலின் 2024 வரை காத்திருக்க வேண்டுமா என் பொறுத்திருந்து பார்ப்போம்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close