இந்தியாசெய்திகள்

நாளை அயோத்தி செல்லும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் ! ராமர் சிலையை வைத்து வழிபாடு !

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் அபார வெற்றி பெற்றது. அறுதி பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று வெற்றி பெற்று 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். கூட்டணி கட்சியான சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது.

,தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை அயோத்திக்கு செல்கிறார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தலில் வைத்துள்ள ராமர் சிலையை வழிபட உள்ளார் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

உத்தவ் தாக்கரே மற்றும் அவருடன் வரும் எம்.பி.க்களுக்கு வரவேற்பு அளிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close