செய்திகள்

“பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்” – பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்தார் மோடி!!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக் நகரில், நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: –

கல்வியும், கலாசாரமும், நமது சமூகத்திற்கு ஒரு நேர்மறையான செயல்பாடுகளை கொடுத்தது. இளைஞர்கள் இடையே, பிரிவினையை பரப்புவதை நிறுத்த வேண்டும். 

இலங்கை சென்ற போது, புனித அந்தோணியார் தேவாலயத்தில் பல அப்பாவிகளின் உயிர்களை பறித்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தை நான் பார்த்தேன். அந்த தேவாலயத்தில்தான் ஏராளமான அப்பாவி மக்கள் தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி பலியானார்கள்.

சர்வதேச அளவில் அச்சுறுத்திவரும் தீவிரவாதத்தை எதிர்க்க, பதிலடி கொடுக்க ஒருமித்த நோக்கில் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாட்மை, நிதி உதவி செய்யும் நாட்மை, ஊக்கம் அளிக்கும் நாட்டை நாம் தனிமைப்படுத்த வேண்டும். இதற்காக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும். 

இந்த பிராந்தியத்தில், பயங்ரவாதத்தை அகற்றவது உறுதி செய்ய வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் சேர்ந்து பிராந்திய அளவில் தீவிரவாதத்துக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான மாநாட்டை சர்வதேச அளவில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் நடத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னிலையிலேயே அந்த நாடு, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதையும், தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதையும் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக போட்டுடைத்தார்.

Source:

https://www.dinamalar.com/news_detail.asp?id=2297857

https://tamil.thehindu.com/world/article27910530.ece?utm_source=HP&utm_medium=hp-tslead


Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close