செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் தோல்வியால் விவசாயகடன் தள்ளுபடி பணத்தை திரும்ப பிடுங்கியது காங்கிரஸ் கூட்டணி அரசு! கர்நாடகாவில் 14000 விவசாயிகள் கொந்தளிப்பு!!

கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. மொத்தம் உள்ள 28 இடங்களில் காங்கிரசுக்கு ஒரு இடமும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒரு இடமும் மட்டுமே கிடைத்தது.

பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் அரசு மூலம் பணம் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் விவசாய கடன் தள்ளுபடிக்காக அரசு செலுத்திய பணம் திடீரென மாயமானது. ஒருவர் இருவருக்கு அல்ல 13,988 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் பணம் மாயமானது. 

கர்நாடகாவின் யர்கிர் மாவட்டத்திலுள்ள, சாகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவப்பா இதுகுறித்து கூறும்போது, “ஏப்ரல் மாதம் எனது வங்கி கணக்கில், முதல்வர் குமாரசாமியின் விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதிபடி 43,553 ரூபாய் அரசின் மூலம் செலுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் 3 – ஆம் தேதி, திடீரென அந்த பணம் மாயமாகிவிட்டது. இதபற்றி எந்த விளக்கமும் தரப்படவில்லை.” என்றார்.

சிவப்பாவைப் போன்று கர்நாடக மாநிலம் முழுவதும் 13,988 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் திரும்ப பிடுங்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் பணம் போட்டனர். ஆனால் தேர்தலில் அவர்கள் படுதோல்வி அடைந்ததால், வங்கி கணக்கில் போடப்பட்ட பணம் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள். 

இது கர்நாடக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது..

Source:
https://timesofindia.indiatimes.com/city/bengaluru/after-lok-sabha-polls-14000-farmers-accounts-wiped-off-loan-waiver/articleshow/69750626.cms?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=TOI&utm_content=om-bm&from=mdr


Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close