சிறப்பு கட்டுரைகள்

அலிகார் 2 வயது சிறுமி ட்விங்கிள் கொடூர கொலை! நடந்தது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்! #JusticeForTwinkleSharma

உத்திர பிரதேசத்தில் அலிகார்கில் 2 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே பல பாலியல் பலாத்கார குற்றங்களில் தொடர்புடைய அஸ்லாம் என்பவனையும், ஜாகீத் என்பவனையும் விசாரித்த பிறகே போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் குழந்தைகளை மட்டும் குறிவைத்து பலாத்காரம் செய்து வந்த அஸ்லாம் என்பவனை சுதந்திரமாக வெளியே நடமாட விட்டது எப்படி? என அலிகார் மக்கள் கோபத்துடன் கேள்வி கேட்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சிறுமி பலாத்காரக் கொலை நடைபெற்ற அலிகார் அருகே  உள்ள தப்பால் கிராமத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஒரு நூறு மீட்டரை கடந்து செல்ல வேண்டும் என்றால் கூட அங்கே ஒரு போலீஸ் நிறுத்தப்பட்டிருப்பதை காணலாம்.

ஹிந்து அமைப்புகள் கொலை செய்யப்பட்ட 2 வயது இந்து சிறுமி சம்பவத்தை கண்டித்து அலிகாரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்த போவதாக  அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதே போல டெல்லி, ஹரியானாவிலும் அறிவிப்பு வெளியிட்டிருந்ததால் அன்று மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. 

சென்ற ஞாயிற்றுக் கிழமை அந்த சிறுமியின் துக்க தினம் நடைபெற்றது.  தப்பால் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட  சிறுமியின்  வீட்டு முன்பாக மிகப்பெரிய பந்தல் போடப்பட்டு, தரையில் கம்பளம் விரிக்கப்பட்டு ஏராளமான உறவினர்களும், ஊர் மக்களும் அங்கு துக்க நிகழ்ச்சியில் குழுமி இருந்தனர். 

காட்டுமிராண்டித்தனமாக செய்யப்பட்ட இந்த படுகொலையால் நாடே ஸ்தம்பித்து போயிருக்கும் நிலையில் அங்கு இருந்த மக்களும் அதிர்ச்சியால் நிலை குலைந்து போய் இருந்தனர்.

அங்கு சென்றிருந்த பத்திரிக்கையாளர்களிடம் சிறுமியின் தந்தை மனோஜ் ஷர்மா கூறுகையில் “யாராவது 10 ஆயிரம் ரூபாய்க்காக இந்த கொடூர படுகொலையை செய்வார்களா? என கேட்ட அவர் அதுமட்டுமல்ல, அந்த பணத்தை திரும்பப் பெற நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை?” என்றார்.

நாங்கள் கேட்பதெல்லாம் குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும். இல்லையேல் நெடுஞ்சாலையில் அவர்களை நிற்க வைத்து கல்லால் அடித்து சாகடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அழுகையுடன் வெறுத்துப்போய் கூறினார்.    

இந்த விவகாரத்தில் ஜாஹித் எப்படி குற்றவாளியானான் என்ற கதையை அவர்  மேலும் விவரிக்கத் தொடங்கினார். 

27 வயதாகும் ஜாஹித் முதலில் இந்த வழக்கில் கைதானான். அடுத்து அவன் வீட்டருகில் வசித்து வரும்  42 வயதாகும் அஸ்லாம் கைதானான். ஜாஹித்  மனைவி சபுஸ்தா மற்றும் அவனுடைய இளைய சகோதரன் மெஹ்தி ஹசன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டனர்.

பெண் காணாமல் போன மே மாதம் 30-ஆம் தேதிக்கு 2 நாள் முன்னால் பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து நான் சாகித் உடன் வாதிட்டுக் கொண்டிருந்தேன் . அங்கிருந்த இஸ்லாமிய பெரியவர் ஒருவரை மத்தியஸ்தமாக வைத்து பிரச்சினையை பேசினேன். ஒரு ஆண்டுக்கு முன்பாக ஜாஹித் 50,000 ரூபாய் கடன் பெற்றிருந்தார்.  இதுவரை அவர் 40,000 ரூபாய்தான் திருப்பிக் கொடுத்தார். இதுதான் பிரச்சினை. 

இந்த பிரச்சனையின்போது மிகவும் கோபப்பட்ட ஜாஹித் “பணம் கொடுத்தவர் அவர். எனக்கும் அவருக்கும் இடையில்தான் பேச்சு, இதில் எவரும் தலையிட முடியாது” என அந்த மத்தியஸ்தரை பார்த்து கத்தினான். நான் அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டு வெளியேறினேன், அப்போது ஜாஹித் மீண்டும் கத்தினான். இந்த விவகாரத்தில் எவனும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் பார்த்துக் கொள்வேன் என்றான். 

ஆனால் அப்போது அவன் மிரட்டியதன் அர்த்தம் அவருக்கு தெரியவில்லை. ஆனால் குழந்தையின் சிதைக்கப்பட்ட உடலை பார்த்தபோது தான் அவருக்கு அவனுடைய மிரட்டல் ஞாபகம் வந்தது. அப்போதுதான் அவருக்கு அவன் மீது சந்தேகமும் வந்தது. 

சென்ற ஜூன் 2-ஆம் தேதி காலை 6.30 மணி அளவில் ஒரு பெண் துப்புரவாளர் அலறிக் கொண்டே ஓடி வந்து ஒரு தகவலை கூறினார். அருகே உள்ள குப்பையில் புழுக்கள் மொய்த்த நிலையில் ஒரு குழந்தை சடலம் உள்ளதாகவும், நாய்கள் அந்த சடலத்தை இழுத்து போட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார். இந்த குப்பைமேடு ஷர்மா வீட்டிலிருந்து ஒரு 200 மீட்டர் தூரம் இருக்கும்.

அங்கு சென்ற அவர்களுக்கு பயங்கரமான அதிர்ச்சி ! நம்பமுடியாத அளவுக்கு அந்த சிறுமி உறுப்புகளெல்லாம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தாள்.

அப்பா! எந்த அளவுக்கு அவர்கள் மிகவும் பயங்கரமான கொடியவர்களாக இருந்திருப்பார்கள்.

பெண் குழந்தையை போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் பின் வருமாறு சொல்கிறார்.. “எனது 7 ஆண்டு சர்வீசில் இது போன்ற ஒரு கொடூரமான, மூர்கத்தனமான கொலையை பார்த்ததில்லை. அந்த குழந்தையின் மூக்கு துவாரத்தை கொடுமையாக சேதம் செய்துள்ளனர். அவளுடைய இடது காலையும், இடது தோள் பட்டையையும் மிக கொடூரமாக தாக்கியுள்ளனர். அதைவிட கொடூரம் அவளது பிஞ்சு கைகளில் ஒன்றான வலது கையை கொடுமையான முறையில் வெட்டி எடுத்து சாகடித்துள்ளனர்”. 

அதே சமயம் போஸ்ட் மார்ட்டம் தகவல் குறித்து சமூக ஊடகங்களில் வந்த செய்திகளில் அவளுடைய மூளை உருக்குலைந்து போயுள்ளதாகவும், கண்கள் தோண்டப்பட்டு இருந்ததாகவும், சிறுநீரகம் மற்றும் இரைப்பை காணவில்லை என்றும் கருப்பை மற்றும் பிறப்புறுப்பு கூட சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின. 

குழந்தை அணிந்திருந்த மஞ்சள் நிற ஆடையை வைத்து குழந்தை எங்கள் குழந்தைதான் என்பது உறுதியானது. குழந்தையின் சடலத்தை பார்த்ததுமே ஜாஹித் முகம்தான் என் கண் முன் வந்து நிற்பதாக ஷர்மா கூறினார். 

குழந்தையின் சடலத்தை பார்த்த கூட்டம் கோபம் அடைந்து ஜாஹித்தை பிடித்து அடித்து நொறுக்கி அவனை போலீசாரிடம் ஒப்படைத்தது. 

குழந்தையின் சடலம் கிடந்த குப்பையின் நேர் எதிரில் ஜாஹித்தின் வீடு இருந்தது. அங்கே வரிசையாக நான்கைந்து வீடுகள் இருந்தன. அதில் உள்ள ஒரு 2 படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டில்தான் குற்றவாளிகளில் முக்கியமானவனான அஸ்லாம் வசித்து வந்தான். ஜாஹித்திடம் போலீசார் விசாரணை நடத்திய பிறகு தான் அவர்கள் அஸ்ஸாமை கைது செய்தனர். ஆனால் அஸ்ஸாம் பங்கு என்ன என்பது குறித்து போலீஸ் எதையும் தெரிவிக்காமல் தன்னை கடனுக்காக அசிங்கப்படுத்தியதற்காகத்தான் பழிவாங்க ஜாஹித் இவ்வாறு செய்ததாக போலீசார் கூறினர்.

உள்ளூர் மக்கள் கூறுகையில் “போலீசார் மோப்ப நாயை கொண்டு வந்து குப்பை அருகே விட்டனர். அந்த நாய் அங்கிருந்து நேராக ஜாஹித் வீட்டுக்குள் நுழைந்தது. ஜாஹித் மனைவி சுபுஸ்தாவிடம் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையை கொன்ற பிறகு அவளுடைய துப்பட்டாவைக் கொண்டு தான் அதில் குழந்தையின் சடலத்தை வைத்து மூட்டை கட்டியது தெரிய வந்தது”. இப்போது இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் உள்ளூர் மக்கள் போலீசார் கூறும் விளக்கத்தை மறுத்து வருகின்றனர். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அம் மக்கள் கூறுகையில் “எங்களுக்கு தெரிந்து ஜாஹித் இந்த கொலையை திட்டமிட்டிருக்க மாட்டான். அவன்தான் இந்த கொலையை நிகழ்த்தினான் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. உண்மையில் இந்த கொலையை திட்டமிட்டு நடத்தியவன், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவன் அஸ்லாம்தான். ஏனெனில் அவன் ஏற்கனவே சிறுமிகளின் கற்பை சூறையாடியவன். அவன் மீது இது போன்ற புகார்கள் நிறைய உள்ளன. அது மட்டுமல்லாமல் ஜாஹித்  குடிகாரன்… கஞ்சா பிடிப்பவன் .. அஸ்லாமும் அவனுடன் வேறு  2 பேரும் சேர்ந்து கஞ்சா புகைப்பவர்கள்தான். இந்த கொடூர கொலையை மற்ற இருவருடன் சேர்ந்து அஸ்லாம் செய்திருக்கலாம் என ஒருவர் கூறினார். 

இந்த நிலையில், தப்பால் காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில் “ஜாஹித் மீது இதற்கு முன் எந்த வழக்கும் இல்லை. ஆனால் அஸ்லாம் மீது குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகள் இரண்டும், உத்தர பிரதேச குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவன்” எனவும் கூறினார். 

மேலும் அஸ்லாம் 2014 ஆம் ஆண்டு IPC 376 (rape) மற்றும் Sections 3 and 4 of POCSO Act படி 9 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த வழக்கில் (FIR number 41/14) கைது செய்யப்பட்டதாகவும், அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறினர். 

கடந்த 2015-ஆம் ஆண்டு அவன் மீது குண்டா சட்டமும் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

2017-ஆம் ஆண்டு மைனர் பெண்ணை கதவை உடைத்து வீடு புகுந்து கற்பழித்ததாக 452 (house-trespass) மற்றும் 354 (outraging modesty of woman) மற்றும்  sections 7 and 8 of POCSO (sexual assault) பிரிவுகளின் மேல் கைது செய்யப்பட்டான் என போலீசார் கூறினர்.

2 வாரங்களுக்கு முன்பாக அவன் சிறுவன் ஒருவனிடம் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கியதாகவும் உள்ளூர் மக்கள் கூறினர்.  

அஸ்லாம் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மோகித் பிரபாத் சிங் என்பவர் கூறுகையில் “அஸ்லாம் 2 ஆண்டுகளுக்கு முன்னால் டெல்லியிலிருந்து ஒரு மைனர் சிறுவனை கடத்தி வந்து தனது வீட்டில் அடைத்து வைத்திருந்தான் என்றும் இது தெரிந்து வந்த டெல்லி போலீசார் அந்த சிறுவனை மீட்டு சென்றதாகவும்” கூறினார். அந்த சம்பவம் நடந்ததை அங்கிருந்த அனைத்து உள்ளூர் மக்களும் உறுதி படுத்தினர். 

தப்பால் போலிஸ் நிலையத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி இந்த வழக்கு பற்றி அறிந்திருந்தார், ஆனால் இது டெல்லியில் பதிவு செய்யப்பட்டது என்றும், இதனால் மேல் விவரங்களை தன்னால் வழங்க முடியவில்லை என கூறினார். 

குப்பையிலிருந்து குழந்தையை கண்டெடுத்த 2 நாள் முன்பாக அஸ்லாம் தனது மனைவியை நடுத்தெருவுக்கு இழுத்து வந்து சண்டை செய்ததாகவும், அப்போது அவன் கையில் கத்தி வைத்திருந்ததாகவும், நாங்கள் சென்று தடுக்கவில்லை என்றால் மனைவியை அவன் கொலை செய்திருப்பான் என்றும் கூறினார்கள். அன்றுதான் அவன் மனைவி தனது தாய் வீட்டிலிருந்து வந்ததாகவும் கூறினார். 

அவன் மிகவும் கொடியவன் என்றும், தனது சொந்த மகளையே சென்ற ஆண்டு மீண்டும், மீண்டும் தாக்கியதாகவும் இதனால் அவனது மனைவி கோபமடைந்து அவளது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் எப்போதாவது அவள் இங்கு வந்து போவாள் எனவும் கூறினர்.

அஸ்லாம் வீட்டுக்கு அருகிலேயே கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாத்தா வீட்டின் பின் பக்க கேட் இருந்தது அவனுக்கு வசதியாக போய்விட்டதாகவும் அவர்கள் கூறினர். 

சிறுமியின் தாத்தாவின் 2 வீடுகள் அந்த தெருவின் எல்லைலேயே எதிர்வரிசையில் உள்ளடங்கியவாறு இருக்கும். அவளுடைய தந்தை வீட்டுக்கும் தாத்தா வீட்டுக்கும் இடையே உள்ள நெருக்கமான சந்து வழியே அவள் அடிக்கடி போய்க்கொண்டும், வந்து கொண்டும் இருப்பாள்.

வேறு எங்கும் செல்ல மாட்டாள். ஜாகித் வீட்டு பக்கம் செல்ல வேண்டிய வேலையே இல்லை. யாரும் வேறு எங்கும் அவளை பார்த்தது இல்லை என சிறுமியின் மாமா கூறினார்.

அவள் காணாமல் போன சென்ற மே மாதம் 30-ஆம் தேதி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் ஒலி பெருக்கி மூலம் ஊர் முழுவதும் தெரிவித்தனர். அடுத்த நாள் யாரோ கடத்தியதாக முதல் தகவல் அறிக்கை section 363 (kidnapping) பதிவு செய்தனர்.  

இதன் பிறகு குடும்பத்தினர் பக்கத்து ஊர்களுக்கு சென்று தேடினர். ஆனால் பலனில்லை. தெருத் தெருவாக ஊரார் சென்று தேடிப் பார்த்தனர். 

சிறுமியை யாரோ கடத்தி சென்று கொலை செய்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யமுனா ஆற்றில் எறிந்திருக்கலாம் எனவும் குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் கொலைகாரர்களின் விருப்பம் இந்த குப்பைதானோ என சிறுமியின் தாய்வழி தாத்தா கூறினார்.

மேலும் போலீசார் ஆரம்பத்தில் இந்த சம்பவத்தில் சிறிய அளவு அக்கறைதான் காட்டியதாகவும், நான்கு நாட்களாக எந்த நடவடிக்கையும் சரியாக எடுக்காமல் அமைதியாக இருந்ததாகவும், அவர்களின் குழந்தையாக இருந்தால் இப்படி நடந்திருப்பார்களா என்றும் கொந்தளிக்கின்றனர்.

மேலும் போலீசார் இந்த வழக்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக சடலம் குப்பையிலிருந்து கிடைத்ததும் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்ளாமல் நேராக ஸ்டேஷன் கொண்டு சென்றதாகவும், அங்கிருந்து வேறு எங்கோ கொண்டு செல்ல முயன்றதாகவும் கூறினார். 

மேலும் போலீசார் தொடக்கத்தில் சடலம் போலீஸ் வாகனத்தில் இருப்பதாக பொய்கள் கூறியதாகவும், மாவட்ட மருத்துவமனையிலுள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு செல்லாமல், உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதேன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். ஏராளமான உறவினர்கள் சேர்ந்து போலீசுக்கு எதிராக ஆர்பாட்டம் செய்ததாகவும் அவர்கள் கூறினர்.

சிறுமியின் உறவினர்கள் மேலும் கூறுகையில் “இந்து – முஸ்லிம் பிரச்சனையாக இது மாறிவிடும் என்பதற்காக போலீசார் இந்த கொலை சம்பவத்தை மூடிவிடப் பார்த்தனர் என்றும் கூறினர். அதனால்தான் இந்த வழக்கை ஆரம்பத்தில் கற்பழிப்பு வழக்காக பார்க்காமல் போலீசார் விட்டுவிட்டதாக” பொது மக்கள் குற்றம் கூறினர்.  

ஆனால் அதன் பிறகு திடு திப்பென்று குழந்தை கொலையில் பாலியல் துன்புறுத்தல் உள்ளதா என்ற அறிக்கை வருவதற்கு முன்பாகவே போலீசார் ஏன்  POCSO வழக்காக மாற்றினர். 

இந்த சம்பவத்தில் அஸ்லாமை மிக எளிதாக மக்கள் சந்தேகப்பட்டனர். ஏனெனில் அவன் பாத் ரூமில் பெண்கள் குளிப்பதை பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் உண்டு. மேலும் ஏற்கனவே குழந்தை பலாத்கார வழக்குகள் உண்டு. டெல்லியிலிருந்து ஒரு சிறுவனை கொண்டு வந்து அடைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் தனது சொந்தத மகள் என்றும் பார்க்காமல் பலாத்காரத்தில் ஈடுபட்டவன் என்பதால் அஸ்லாமை சுலபமாக சந்தேகப்பட்டதாக சிறுமியின் பக்கத்து வீட்டினர் கூறினார். 

அஸ்லாம் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்காரர் மோஹித் அகர்வால் இது குறித்து கூறுகையில் “அவனை இங்குள்ள நிறைய பேர் புறக்கணிப்பார்கள். நான் அவனிடம் எந்த தொடர்பும் கொள்வதில்லை. அவன் என் கடைக்கு வந்தால் மற்றவர்கள் என்னை வெறுப்பார்கள்” என்றார்.

அஸ்லாமின் செயல்கள் பிடிக்காமல் அவனை ஊரை விட்டு தள்ளி வைக்க வேண்டும் என ஊரார்கள் முடிவு செய்த போது சில முஸ்லிம் சமுதாயத்தினர் உள்ளூர் அரசியலுக்காக அந்த முடிவை எதிர்த்தனர் என்று மோகித் பிரதாப் சிங் என்பவர் கூறினார். 

ஜாஹித்தின் வீட்டுக்கு அருகில் உள்ள அஸ்லாமின் மற்றொரு வீட்டின் குப்பையிலிருந்துதான் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. இங்கு அருகாமையில் ஏராளமான முஸ்லிம் வீடுகள் உள்ளன. ஆனால் ஒருவர் கூட இந்த சம்பவம் குறித்து பேச மறுக்கின்றனர். பத்திரிக்கையாளர்கள் சென்ற  ஞாயிற்றுக் கிழமை அங்கு சென்ற போது, முஸ்லிம்கள் தங்கள் வீட்டை உள் புறம் பூட்டி வைத்துக் கொண்டு யாரும் வெளியே வரவில்லை.  

அஸ்லாம் குறித்து அவனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரெஹன்னா கூறுகையில் “அஸ்லாம் தனி ஆளாகவே வசித்ததால் அவரைப் பற்றி தெரியவில்லை. மேலும் நீங்கள் கூறித்தான் இந்த விஷயங்கள் குறித்து என்னால் அறிய முடிகிறது” என்றாராம். 

இங்குள்ள முஸ்லிம்கள் எல்லாம் வீட்டை அடைத்துக் கொண்டு எங்கே சென்றார்கள் என்று கேட்டதற்கு அவர்கள் போகும் போது என்னிடம் எதுவும் சொல்லவில்லை என வெடுக்கென பதில் கூறினாராம். 

அஸ்லாம் வீட்டில் உள்ள ஒரு இருண்ட அறையில் மாடுகளுக்கான தீவனம் வைக்கப்பட்டு இருந்தது. அந்த அறையில்தான் டெல்லியிலிருந்து கடத்தப்பட்ட சிறுவனை அவன் அங்கு அடைத்து வைத்திருந்ததாக உள்ளூர் மக்கள் கூறினர். 

இந்த நிலையில் பண விஷயத்துக்காக அஸ்லாம் சிறுமியை கொலை செய்யவில்லை என்று அடித்துக் கூறும் பொது மக்கள் “ஏன் இவ்வளவு வழக்குகள் அவன் மேல் இருந்தும் போலீசார் அவனை சுதந்திரமாக வெளியில் சுற்ற அனுமத்தித்ததேன்?” என்று கேள்வி எழுப்பினர். 

சிறுமியின் உறவினர் ஒருவர் கூறுகையில் “தனது சொந்த மகளையே பாலியல் வெறி கொண்டு அவன் தாக்கியதாக அவன் மேல் போலீசில் வழக்கு இருக்கும் நிலையில் அவனது குடும்பத்தினர் ஏன் அவனை ஜாமீனில் எடுத்து வருகின்றனர். ஏன் போலீசார் அடுத்தடுத்து அவனுக்கு ஜாமீன் வாங்கி தருகின்றனர்?” என்கிறார்.

போலீசார் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கு டெல்லியில் உள்ள காவல் அதிகாரிகள் பதில் கூறுகையில் “குற்றவாளிகள் அடிக்கடி ஜாமீன் பெறுவதற்கு காரணம் உள்ளூர் போலீசார்தான் எனவும் அவர்கள் மீது தான் தவறுகள் உள்ளன” என்றும் கூறினார். அவர்கள் குற்றவாளிகளை கோர்டில் நிறுத்தும் போது நீதிபதிகளிடம் குற்றவாளிகளின் வழக்கு வரலாற்றை விவரமாக சொல்வதில்லை என்றும் அவர்கள் கூறினர்.  

இந்த சிறுமியின் கொடூரமான சாவால் உள்ளூரில் உள்ள மற்ற சிறுமிகளின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் பலர் வருத்தத்துடன் கூறினர். பயத்தினால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத உள்ளூர் பெண் ஒருவர் ஆடியோ ஒலிப்பதிவில் கூறுகையில் “பெரியவர்கள் பேசுவதிலிருந்து குழந்தைகளுக்கு சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட  விவகாரம் தெரிந்து விட்டதாகவும், அவர்கள் இது தொடர்பாக நிறைய விஷயங்கள் கேட்பதாகவும்” கூறினார். மேலும் அவர்கள் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளதாகவும், இதனால் அவர்கள் பள்ளிக்கு கூட செல்ல விரும்பவில்லை என்றும் கூறினர்.

This is translated from Swarajya Magazine’s article titled Aligarh: Angry Locals Ask Why Serial Sexual Predator Aslam, Who Targeted Minors, Was Roaming Free written by Swati Goel Sharma.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close