இந்தியாசெய்திகள்

முதல்வரை விமர்சித்ததால் இருவர் கைது : காங்கிரஸ் கூட்டணி ஆளும் கர்நாடகத்தில் நசுக்கப்படும் கருத்து சுதந்திரம்

கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களை விமர்சித்ததால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஒருவர் மற்றும் அவரது நண்பரான கார் ஓட்டுநர் ஆகிய இருவரையும் கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து, முதல்வர் குமாரசாமி, அவரது தந்தை முன்னாள் பிரதமர் தேவகெளடா, மற்றும் முதல்வரின் மகன் ஆகியோரை திட்டி காணொளி ஒன்றை வெளியிட்ட இருவருக்கும் எதிராக ஐ.பி.சி 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close